ஜம்முவில் வெளுத்து வாங்கும் வெயில், 76 ஆண்டு சாதனையை முறியடித்தது..!

By Kevin KaarkiFirst Published Mar 28, 2022, 12:14 PM IST
Highlights

அடுத்த சில நாட்களுக்கும் வறண்ட வானிலையோடு வெப்பக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வாளர் சோனும் லோட்டஸ் தெரிவித்து இருக்கிறார். 

ஜம்முவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று 37.3 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தியது. இது மார்ச் மாதத்தில் 76 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் ஆகும். முன்னதாக மார்ச் 31, 1945 ஆண்டு ஜம்முவில் வெப்பம் 37.2 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி இருந்தது. அதன் பின் நேற்று (மார்ச் 27) தான் இத்தகைய வெயில் கொளுத்தி இருக்கிறது. 

குறைந்த அழுத்தம் காரணமாக கடந்த நான்கு நாட்களாக ஜ்ம்மு காஷ்மீரில் வெப்பம் சீராகவும், தெளிவாகவும் இருந்து வந்தது. "அடுத்த சில நாட்களுக்கும் வறண்ட வானிலையோடு வெப்பக் காற்று வீசக் கூடும்," என வானிலை ஆய்வாளர் சோனும் லோட்டஸ் தெரிவித்து இருக்கிறார்.  

அதிகபட்ச வெப்பம்:

வானிலை ஆய்வு மைய தகவல்களின் படி, இந்த சீசனில் ஜம்முவில் அதிகபட்ச வெப்பம் 8.4 டிகிரிகளே ஆகும். எனினும், இரவு நேரத்தில் தற்போது 16.9 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி இருக்கிறது என வானிலை ஆய்வு மைய செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். 

ஜம்முவை தொடர்ந்து ஸ்ரீநகர் பகுதியிலும் வெப்பக் காற்று வாட்டி வதைக்கிறது. இங்கு பகலில் 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. இது வழக்கத்தை விட 7.4 டிகிரிக்கள் அதிகம் ஆகும். இரவு நேரத்தில் 7.2 டிகிரி பதிவாகி இருக்கிறது. இது வழக்கத்தை விட 1.1 டிகிரி அதிகம் ஆகும். 

மாதா வைஷ்னோ தேவி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யாத்திரையை ஆரம்பிக்கும் காத்ரா பகுதியில் 32.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் இங்கு 16.7 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது வானிலை ஆய்வு மைய செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

வாட்டி வதைக்கும் வெப்பம்:

குஜராத் மற்றும் மும்பை பகுதிகளை தொடர்ந்து இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு, மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக மேற்கு இமால பகுதிகள் மற்றும் குஜராத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் இதேபோன்று வானிலை மேற்கத்திய மத்திய பிரதேசம், விதர்பா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

click me!