அரசு ஊழியர்கள் குட்நியூஸ்.. இனி அனைத்து அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை..!

Published : Mar 28, 2022, 06:26 AM IST
அரசு ஊழியர்கள் குட்நியூஸ்.. இனி அனைத்து அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை..!

சுருக்கம்

மாநிலத்தில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும். அதன்படி கோடைக்காலமான மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் அலுவலகம் செயல்படும்.

ஏப்ரல் 1 முதல் மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே வேலை வாரம் என மணிப்பூர் முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சமீபத்தில் நடந்து முடிந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்திற்கு பிரேன் சிங் மீண்டும்  முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படவும், 2 நாள் விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை

இதுதொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டு செய்தி குறிப்பில் ;- மாநிலத்தில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும். அதன்படி கோடைக்காலமான மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் அலுவலகம் செயல்படும்.

பள்ளி நேரம் மாற்றம்

2 நடைமுறையிலும் மதிய உணவு இடைவேளை 1 முதல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். பள்ளிகளை பொறுத்தமட்டில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை காலை 8 மணிக்கு துவக்கலாம். இதுதவிர நேரத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் செய்து வழங்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!