மீண்டும் களமிறங்கிய வாவா சுரேஷ் - 12 அடி நாகப்பாம்பை லாவகமாக பிடித்து அசத்தல்

By Kevin KaarkiFirst Published Mar 27, 2022, 12:53 PM IST
Highlights

கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் இருப்பதாக வாவா சுரேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பாபம்புகளை பிடிப்பதில் மிகவும் பிரபலமானவர் கேரளாவை சேர்ந்த வா வா சுரேஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கேரளாவின் கோட்டயம் அருகில் உள்ள குறிச்சி என்ற பகுதியின் வீட்டில் இருந்த நாக பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி நாக பாம்பை லாவகமாக பிடித்த வாவா சுரேஷ் அதனை சாக்கு பையில் அடைக்க முயன்றார், அப்போது அந்த பாம்பு வாவா சுரேஷ் வலது தொடையில் தீண்டியது. 

இதையடுத்து சிகிச்சை பெற்று கடந்த மாத துவக்கத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வாவா சுரேஷ் தற்போது மீண்டும் களமிறங்கி இருக்கிறார். கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் இருப்பதாக வாவா சுரேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வாவா சுரேஷ் தேடலுக்கு பின் ராஜநாக பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்தார்.

தீவிர சிகிச்சை:

முன்னதாக நாக பாம்பு கடித்ததை அடுத்து வாவா சுரேஷ் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் வாவா சுரேஷ். இவரது உடலில் நாக பாம்பின் விஷம் அதிகளவில் பரவி இருந்ததை அடுத்து வாவா சுரேஷ் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. வாவா சுரேஷ் உடலில் இருந்த விஷத்தை முழுமையாக அகற்ற சுமார் 50-க்கும் அதிக பாட்டில் விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டது. 

மேலும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் நலம் பெற்ற வாவா சுரேஷ் கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது, தனக்கு இது மறு பிறவி என அவர் தெரிவித்தார். மேலும் அவர் அமைச்சர் வி.என். வாசவன் மேற்கொண்ட அனைத்து உதவிகளுக்கும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

16 முறை:

47 வயதான வாவா சுரேஷ் இதுவரை 16 முறை பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். எனினும், கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்டதை போன்ற பாதிப்பு அவருக்கு அதற்கு முன் ஏற்பட்டதே இல்லை. அதிகளவு விஷம் தாக்கியதில் உடல் நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வாவா சுரேஷ் மருத்துவர்களின் சிகிச்சையால் மீண்டும் உயிர்பிழைத்து இருக்கிறார். 

click me!