ராஜஸ்தானில் ஹீட் ஸ்ட்ரோக்கால் 3,622 பேர் மருத்துவமனையில் அனுமதி!

By Manikanda Prabu  |  First Published May 28, 2024, 11:35 AM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் அதீத வெப்பத்தால் வரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு 3,622 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதுடன் வெப்பத்தின் அளவு 49 டிகிரி செல்சியஸ் வரை கூட செல்கிறது. அந்த வகையில், பாலைவன மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் அதீத வெப்பத்தால் வரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு 3,622 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வெப்பத்தின் காரணமாக, நம் உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போவதுதான் 'ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் நேரடியாக 'ஹீட் ஸ்ட்ரோக்'கால் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2809 இலிருந்து 3622 ஆக அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் தொடர்ந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ராஜஸ்தானின் பலோடியில் நேற்று 49.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இது இயல்பை விட 6.3 டிகிரி அதிகமாகும். அதேபோல், ஜெய்ப்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 46.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது முந்தைய நாளை விட 0.8 டிகிரி அதிகமாகும். கோட்டாவில் அதிகபட்சமாக 48.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. குறைந்தபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகமாகும்.

பிரஜ்வல் ரேவண்ணா குற்றச்சாட்டுக்கு டி.கே.சிவக்குமார் பதில்!

அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அஜ்மீரில் அதிகபட்ச வெப்பநிலை 46.3 டிகிரி செல்சியஸ், பில்வாரா (47.4), பரத்பூர் (48.2), அல்வார் (46.2), பிலானி (48.5), சித்தோர்கர் (47), பார்மர் (49.3), ஜெய்சால்மர் (48.7), ஜோத்பூர் (47.4), பிகானேர் (48.2), சுரு (48), ஸ்ரீ கங்காநகர் (48.3), மற்றும் தோல்பூரில் அதிகபட்சமாக 48.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தற்போது நிலவும் கடுமையான வெப்ப நிலை அடுத்த 2-3 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும், மே 29ஆம் தேதி முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்றும், ஜூன் முதல் வாரத்தில், அதிகபட்ச வெப்பநிலை சாதாரண அளவில் இருக்கும் எனவும் அம்மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

click me!