3 எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் - மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
3 எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் - மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சுருக்கம்

HC notice to puducherry govt

துணை நிலை ஆளுநர் 3 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்தது செல்லாது என காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மாநில துணை ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது சட்டப்படி செல்லாது என காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது.

அப்போது, மனுதாரர் லட்சுமி நாராயணன் தரப்பில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன் சட்டமன்ற சபாநாயகரிடம் மனு கொடுக்க வேண்டும். அவரது பரிந்துரைப்படி, துணை நிலை ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், சட்டமன்ற சபாநாயகர், எவ்வித பரிந்துரையும் செய்யாமல், விதிமுறைகளை மீறி துணை நிலை சபாநாயகர் கிரண்பேடி 3 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துள்ளார். இந்த பதவி பிரமாணம் செல்லாது என வாதிட்டனர். மேலும், மாநில அரசுடன் எவ்வித கலந்தாலோசனை நடத்தாமல், பதவி பிரமாணம் செய்துள்ளது தவறானது என கூறினர்.

இதை கேட்ட நீதிமன்றம், புதுச்சேரி அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!