இனி மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்தால் 5 லட்சம் அபராதம்….மத்திய அரசு அதிரடி

 
Published : Dec 14, 2016, 11:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
இனி மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்தால் 5 லட்சம் அபராதம்….மத்திய அரசு அதிரடி

சுருக்கம்

இனி மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்தால் 5 லட்சம் அபராதம்….மத்திய அரசு அதிரடி

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பது  தொடர்பான சட்ட மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா மீதான அறிகைகையையும் நிலைக்குழு தாக்கல் செய்தது.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் இந்த மசோதாவை  குளிர் கால கூட்டத்தொடரில் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடந்து வலியுறுத்தி வந்தன.

ஆனால் கடந்த மாதம் 16 ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் நாடாளுமன்றம் கடந்த சில வாரங்களாக முடங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாளையுடன் குளிர்காலகூட்டத் தொடர் முடிவடைவதால் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்படும் என பா.ஜ.கட்சி உறுதியளித்திருந்தது. இதனையடுத்து எதிர்கட்சிகள் ஒத்துழைப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது..

மேலும் இந்த சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்தால், 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த புதிய மசோதா வகை செய்கிறது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!