குல்பூஷன்  யாதவ் தண்டனையில் இருந்து தப்புவாரா? பாகிஸ்தான் ராணுவ தளபதியிடம் கருணை மனு!!!

 
Published : Jun 22, 2017, 08:33 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
குல்பூஷன்  யாதவ் தண்டனையில் இருந்து தப்புவாரா? பாகிஸ்தான் ராணுவ தளபதியிடம் கருணை மனு!!!

சுருக்கம்

Gulbhushan applied mercy pettition

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் , பாகிஸ்தான்  ராணுவ தளபதியிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது.

குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இருப்பினும் இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தற்காலிகமானது என பாகிஸ்தான் அறிவித்தது.

இந்நிலையில் குல்பூஷன் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தளபதிக்கு கருணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!