Gujarat elections 2022 :குஜராத் 2ம் கட்டத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்த 3 கிராம மக்கள் ! என்ன காரணம்

By Pothy RajFirst Published Dec 6, 2022, 11:24 AM IST
Highlights

குஜராத்தின் மேக்சனா மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த 5,200 வாக்காளர்கள் 2ம் கட்டத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

குஜராத்தின் மேக்சனா மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த 5,200 வாக்காளர்கள் 2ம் கட்டத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

நீண்டகாலமாக தங்கள் கோரிக்கையான, குடிநீர் பற்றாக்குறையைப் போக்கவில்லை என்பதால், 3 கிராம மக்களும் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். 

2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது எப்படி? பாஜக உயர் நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. முதல்கட்டத் தேர்தல் டிசம்பர்1ம்தேதியும், 2ம் கட்டத் தேர்தல் டிசம்பர் 5ம் தேதியும் நடந்தது. இதில் 14 மாவட்டங்களில் உள்ள வடக்கு மற்றும் மத்திய மண்டல மாவட்டங்களில் 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வரும் 8ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

கேருலா தாலுகாவில் உள்ள வரீதா, தலிசனா, தேவோல் ஆகிய 3 கிராமத்தினரும்  எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்காமல் பல்வேறு தேர்தல்களில் புறக்கணித்துள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

கேசிஆர்-மோடி மோதல் முற்றுகிறது: ஜி20 அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பு

நர்மதை நதி தண்ணீர் மூலம் ஏரியை நிரப்புகிறோம் என்று வாக்குறுதி அளித்தும்கூட, மக்கள் யாரும் பிடிவாதமாக தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் இந்த 3 கிராமத்தினரும், தாலுகா, மாவட்ட மற்றும் கிராமப் பஞ்சாயத்து அளவில் நடந்த எந்தத் தேர்தலிலும் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். தங்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றாதவரை தேர்தலில் வாக்களிக்க மாட்டோம், சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிப்போம் என்று கிராமக்கள் தெரிவித்திருந்தனர்.

குஜராத் தேர்தல்: 100-வது வயதிலும் சக்கரநாற்காலியில் வந்து வாக்களித்த, பிரதமர் மோடியின் தாயார்

கிராமமக்களின் கோரிக்கையைக் கேட்ட அதிகாரிகள் பைப் மூலம் நர்மதை நதி நீரை ஏரியில் நிரப்புவதாக மக்களிடம்வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதிகாரிகள் வார்த்தையை மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். 

இந்த 3 கிராமங்களிலும் சேர்த்து ஏறக்குறைய 5200 வாக்காளர்கள் உள்ளனர். கிராம மக்களிடம் சென்று மாவட்ட ஆட்சியர் உதித் அகர்வால் சமாதானம் பேசினார். ஆனால், ஆட்சியர் வாக்குறுதி அளித்தும், அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லாமல் தேர்தலைப் புறக்கணித்தனர்.

இதேபோல பெச்சாரியா தாலுகாவில் உள்ள பிரியாப் கிராமத்திலும் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். இதை அறிந்த உள்ளூர் நிர்வாகிகள், கிராம மக்களிடம் சமாதானம் பேசி வாக்களிக்க வைத்தனர். 

click me!