அவர் நிறைய உழைக்கிறார்... அவருக்கு ஓய்வு தேவை... பிரதமர் பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட மோடியின் சகோதரர்!!

Published : Dec 05, 2022, 05:51 PM IST
அவர் நிறைய உழைக்கிறார்... அவருக்கு ஓய்வு தேவை... பிரதமர் பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட மோடியின் சகோதரர்!!

சுருக்கம்

பிரதமர் மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்கிறாரஎன்றும் அவர் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவரது சகோதரர் சோம்பாய் மோடி தெரிவித்தார். 

பிரதமர் மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்கிறாரஎன்றும் அவர் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவரது சகோதரர் சோம்பாய் மோடி தெரிவித்தார். குஜராத் சட்டசபை தேர்தலில் 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரில் உள்ள ரைசன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

இதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் வாக்களித்தார். பின்னர் அவரது மூத்த சகோதரர் சோம்பாய் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடிக்கும் அவரது சகோதரருக்கும் இடையிலான சந்திப்பு சுமார் 23 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து சோமாபாய் மோடி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டார்.

இதையும் படிங்க: மூத்த குடிமக்களின் ஓய்வூதியம், டெபாசிட் வருமானத்திற்கு வரியா? இனி கட்ட வேண்டாம்; இதை மட்டும் செய்தால் போதும்!!

பின்னர் பேசிய அவர், 2014க்கு பிறகு மத்திய அரசின் பணிகளை மக்கள் புறக்கணிக்க முடியாது. மோடி பிரதமராகி நாட்டுக்காக பாடுபடுவதைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த சந்திப்பின் போது எனது சகோதரருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினேன். பிரதமர் மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்கிறார், கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன் என்றார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!