பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடி, தனது 100வது வயதிலும் சர்க்கர நாற்காலியில் வந்து, ஜனநாயகக் கடமையாற்றி குஜராத் தேர்தலில் இன்று வாக்களித்தார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடி, தனது 100வது வயதிலும் சர்க்கர நாற்காலியில் வந்து, ஜனநாயகக் கடமையாற்றி குஜராத் தேர்தலில் இன்று வாக்களித்தார்.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ம்தேதி 89 தொகுதிகளுக்கு நடந்தது. இந்நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
குஜராத் தேர்தல்:அகமதாபாத்தில் மக்களோடு வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்
அகமதாபாத் நகரில் உள்ள ராணிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பிரதமர் மோடி காலை 9.30 மணிக்கு வந்தார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்.
அகமதாபாத்தில் நகரில் உள்ள நாரன்புரா பகுதியில் உள்ள நகராட்சி மையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்களித்தார்முன்னதாக குஜராத் தேர்தலில் வாக்களிக்க வந்திருந்த பிரதமர் மோடி, தனது தாய் ஹிராபாவைச் சந்தித்து ஆசி பெற்றுச் சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடி கடந்த ஜூன் மாதம்தான் 100வயதை எட்டினார். இந்த தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்து இன்று தேர்தலில் ஹிராபென் மோடி வாக்களித்தார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா ராஜஸ்தான் சென்றது
காந்திநகரில் உள்ள ரேசன் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு இன்று தனது இளைய மகன் பங்கஜ் மோடி, மற்றும் உறவினர்கள் உதவியுடன் சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்ட ஹெரிபென் மோடி வந்திருந்தார். அவரிடம் தேர்தல் வாக்குப்பதிவு அதிதகாரி கைரேகை பெற்றுக்கொண்டு வாக்களிக்க அனுமதித்தார்.
முதல் கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளில், 63 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. 2-ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 285 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். இந்த தேர்தலுக்காக மொத்தம் 14,975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.13 லட்சம் அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மொ்தம் 2.51 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.