பவேஷ் பண்டாரி தம்பதி ஊர்வலமாகப் போய் சொத்துக்களை நன்கொடையாக அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகப் பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயின் தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக அளித்து துறவறம் பெற்றுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகளும் 16 வயது மகறும் 2022ஆம் ஆண்டில் துறவறம் ஏற்றனர். அப்போது, பவேஷ் தானும் தன் மனைவியுடன் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
கட்டுமான தொழில் செய்து வந்த பவேஷ் பண்டாரிக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. ஜெயின் மதத்தில் துறவறம் பூண்ணும்போது தீட்சை பெறுவது முக்கியமானது. அதன்படி, துறவு மேற்கொள்பவர்கள் தங்கள் சொத்துக்களைத் துறக்க வேண்டும். நாடு முழுவதும் வெறும் காலுடன் நடந்து சென்று பிச்சை எடுத்து வாழ் வேண்டும்.
Zoom மீட்டிங்கில் ஆபாச வீடியோ... பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜன் ஆவேசம்!!
துறவிகளான பிறகு அமர்வதற்காக இடத்தை சுத்தம் செய்ய ஒரு துடைப்பம், இரண்டு வெள்ளை உடை, பிச்சை பாத்திரம் ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். அகிம்சை மார்க்கத்தின் அடையாளமாக ஜெயின் துறவிகள் எளிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இந்நிலையில் பவேஷ் பண்டாரியும் அவரது மனைவியும் அண்மையில் 35 பேர் கொண்ட குழுவுடன் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாகப் பயணித்தனர். அரச குடும்பத்தினர் போல உடை அணிந்திருந்த அவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் தானமாக வழங்கிக்கொண்டே சென்றனர். இந்த யாத்திரையின் முடிவில் சொத்துக்களை முழுமையாக நன்கொடையாக அளித்துவிட்டனர்.
பவேஷ் பண்டாரி தம்பதி ஊர்வலமாகப் போய் சொத்துக்களை நன்கொடையாக அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகப் பரவி வருகிறது.
ஆஸி.யில் சிட்னி தேவாலய பாதிரியார் மீது சரமாரி கத்துக்குத்து தாக்குதல்; பதற வைக்கும் வீடியோ!