Fact check மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யும் வீடியோ போலி!

Published : Apr 15, 2024, 05:42 PM IST
Fact check மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யும் வீடியோ போலி!

சுருக்கம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று கூறும் வீடியோ போலியானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தேர்தல் காலங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவது சகஜமாக நடைபெறும் விஷயம்தான். ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் போலி செய்திகள் குறித்து பொதுமக்கள் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். அந்த வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று கூறும் வீடியோ போலியானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பானவை அல்ல; அதனை ஹேக் செய்யலாம் என பலரும் கூறி வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என கூறும் யூ-டியூப் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள இவிஎம் இயந்திரம் வாக்குச்சாவடிக்கு சொந்தமானது அல்ல; போலியானது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

அத்துடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை விவரிக்கும் இணைப்பையும் தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக்  செய்யப்பட முடியாத ஒன்று எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்பான கன்ட்ரோலர்கள் உள்ளன. அவை, ஒருமுறை ப்ரோகிராம் செய்யப்பட்டு விட்டால் மறுமுறை ப்ரோகிராம் செய்யப்படுவதை தடுக்கும். மைக்ரோகண்ட்ரோலர்கள் பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் உற்பத்தியாளர்களின் இணையதளங்களில் பொதுவில் கிடைக்கும்.

Loksabha Election 2024 தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார நேரம் நீட்டிப்பு: வேட்பாளர்களுக்கு குட் நியூஸ்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு தனியான சாதனம். அந்த இயந்திரத்தை தாண்டி வயர்லெஸ் இணைப்போ, வயர் இணைப்போ என எதுவும் அதற்கு கிடையாது. வாக்கு செலுத்தும் அலகு (Ballot Unit), கட்டுப்பாட்டு அலகு (Control Unit), மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை தாள் (VVPAT) ஆகியவை டிஜிட்டல் சான்றிதழ்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். எனவே, EVM உடன் வேறு எந்த இயந்திரத்தையும் இணைக்க இயலாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை