பிஷப் இம்மானுவேல் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவாலயத்தில் இருந்தவர்கள் தாக்கிய நபரை தடுத்து நிறுத்தி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வேக்லி பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் பேசிக்கொண்டிருந்த பிஷப் இம்மானுவேல் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.
திங்கள்கிழமை மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தேவாலயத்தில் இருந்தவர்களை கதிகலங்க வைத்தது. பிஷப் இம்மானுவேல் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவாலயத்தில் இருந்தவர்கள் தாக்கிய நபரை தடுத்து நிறுத்தி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. தேவாலயத்தின் லைவ் ஸ்ட்ரீம் வீடியோவில் இந்தத் தாக்குதல் சம்பவம் நேரடியாக ஒளிபரப்பாகி இருக்கிறது. தாக்கப்பட்ட பாதிரியார் கூட்டத்தினரின் அலறலுக்கு மத்தியில் தரையில் சரிவதை வீடியோவில் காணமுடிகிறது.
Zoom மீட்டிங்கில் ஆபாச வீடியோ... பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜன் ஆவேசம்!!
🚨: Christian preacher Mar Mari Emmanuel has been stabbed in a church in western Sydney, Australia; 4 people have been stabbed in the mass stabbing attack pic.twitter.com/kO680WW0O4
— World Source News 24/7 (@Worldsource24)தேவாலயத்தில் நடந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, காயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிஷப் இம்மானுவேல் சிகிச்சை பெற்று வரும் சிட்னியின் லிவர்பூல் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
"கைது செய்யப்பட்ட ஒருவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறார். சிகிச்சையில் இருக்கும் நான்று பேருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவுக்கு காயம் ஏற்படவில்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்" என்று போலீசார் கூறியுள்ளனர்.
i5 லேப்டாப் வாங்கணுமா? வெறும் ரூ.50,000 க்கு எக்கச்செக்க ஆப்ஷன்ஸ் இருக்கு!