heroin drugரூ.350 கோடி ஹெராயின் பறிமுதல்: குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி: பாகிஸ்தானிலிருந்து வந்ததா?

By Pothy Raj  |  First Published Jul 12, 2022, 3:29 PM IST

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.350 கோடி மதிப்பு மிக்க 70கிலோ ஹெராயின் போதைப் பொருளை குஜராத் தீவிரவாத தடுப்புப்படையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் தீவிரவாத் தடுப்படையினருக்கு, ஹெராயின் போதைப்பொருட்கள் கடத்துவது குறித்து



குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.350 கோடி மதிப்பு மிக்க 70கிலோ ஹெராயின் போதைப் பொருளை குஜராத் தீவிரவாத தடுப்புப்படையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத் தீவிரவாத் தடுப்படையினருக்கு, ஹெராயின் போதைப்பொருட்கள் கடத்துவது குறித்து ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, துறைமுகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் பகுதியை தீவிரவாதத் தடுப்புப் படையினர் சோதனையிட்டனர். 

Tap to resize

Latest Videos

அப்போதுஒரு கன்டெய்னரில் 70 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பொருள் இருப்பதை தீவிரவாத தடுப்பு போலீஸார் கண்டுபிடித்தனர்.

தீவிரவாதத் தடுப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால், போதைப் பொருட்கள் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்தப் போதைப் பொருள் பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்டதா அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

குஜராத்தின் பல்துறை அதிகாரிகள், சிபிஐ, தீவிரவாதத் தடுப்புப்படை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இதற்கு முன் ஏராளமாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் முந்த்ரா துறைமுகத்தில் 3டன் ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருட்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்டதாகும். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடியாகும். 

கடந்த மே மாதம், முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 மதிப்புள்ள 56 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஏப்ரல் மாதம், ரூ.1,439 மதிப்புள்ள ரூ.205.6 எடைகொண்ட ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபாவ் துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவினர், தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் சேர்ந்து, ரூ.450 கோடி மதிப்புள்ள 90 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

click me!