supermoon 2022: full moon: சூப்பர்மூன் 13-ம்தேதி இரவு வானில் தோன்றும்: பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?

By Pothy Raj  |  First Published Jul 12, 2022, 11:05 AM IST

2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்(பெரு நிலவு) 13ம் தேதி இரவு வானில் தோன்றும். இந்த சூப்பர் மூனுக்கு ‘பக் சூப்பர் மூன்’(buck suprmoon) அல்லது, ‘தண்டர் மூன்’(Thunder moon) அல்லது ‘ஹே அல்லது ‘மெட் மூன்’ என்று அழைக்கப்படுகிறது


2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்(பெரு நிலவு) 13ம் தேதி இரவு வானில் தோன்றும். இந்த சூப்பர் மூனுக்கு ‘பக் சூப்பர் மூன்’ அல்லது, ‘தண்டர் மூன்’ அல்லது ‘ஹே அல்லது ‘மெட் மூன்’ என்று அழைக்கப்படுகிறது

Tap to resize

Latest Videos

பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமி கோளுக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும். 

சூப்பர் மூன் எப்போது பார்க்கலாம்?

நாசாவின் அறிக்கையின்படி, “ 2022, ஜூலை 13ம் தேதி புதன்கிழமை பிற்பகலில் இருந்து சூப்பர் மூன் வெளிப்படும். சூரியனுக்கு எதிராக வெளிப்பட்டு பூமிக்கு நிலவு காட்சியளிக்கும். கடந்த மாதம் சூப்பர் மூன் உருவானது, அதற்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சூப்பர் மூன் இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை. 

ஆனால்,  இந்த சூப்பர் நிலவை இந்தியாவில் வியாழக்கிழமை (நள்ளிரவு 1மணி) அதிகாலையிலிருந்து பார்க்க முடியும். நாசாவின் கணக்கின்படி, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வானில் இருக்கும்.

சூப்பர்மூன் என்றால் என்ன

சூப்பர் மூன் என்பது, நிலவு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமாக வரும்போது சூப்பர் மூன் தோன்றும். அப்போது, வழக்கத்தை விட நிலவு அளவில் பெரிதாகவும், ஒளி அதிகமாகவும் இருக்கும். சூப்பர் மூன் என்பது அதிகாரபூர்வப் பெயர் இல்லை. நாளை வரும் சூப்பர்மூன், பூமியிலிருந்து 3 லட்சத்து 57ஆயிரத்து 264 கி.மீ தொலைவில் தெரியும். 

கடந்த மாதம் வந்த ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் பூமியிலிருந்து 3,63,300 கி.மீ தொலைவில் இருந்தது. ஆனால் நாளை தோன்றும் பக் சூப்பர் மூன், ஏறக்குரைய 6ஆயிரம் கி.மீ குறைவாக  பூமிக்கு அருகே வருவதால், வழக்கத்தைவிட பெரிதாக நிலவு தோன்றும் 

கடந்த 1979ம் ஆண்டு ரிச்சர்ட் நோலே எனும் வானியல் நிபுணரால் வைக்கப்பட்ட பெயராகும். 
சூப்பர் மூன் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறைவரை தோன்றலாம். சூப்பர் மூன் வழக்கத்தைவிட 17 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும்இருக்கும்.

சூப்பர்மூன் மற்ற நாட்களில் வரும் நிலவைவிட சற்றுதான் பெரிதாக இருக்கும், ஆனால் ஒளி அளவில் அதிகான ஒளிவீச்சை வழங்கும். இந்த சூப்பர் மூன் வரும் காலத்தில் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பு, கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

அடுத்த சூப்பர் மூன் எப்போது?

2022ம் ஆண்டில் ஏற்கெனவே ஒரு சூப்பர் மூன் வந்துவிட்டது, நாளை 2-வது சூப்பர் மூன் வர உள்ளது. 3-வது சூப்பர் மூன் ஆகஸ்ட் மாதத்தில் வரும். அதன்பின் 2023 ஜூலை 3ம் தேதி சூப்பர் மூன் வரும்.


 

click me!