அப்பாடா.. நிம்மதி அளிக்கும் மத்திய அரசின் அறிக்கை.. இந்தியாவில் சரசரவென குறைந்த கொரோனா கேஸ்கள்.!

By vinoth kumar  |  First Published Jul 12, 2022, 10:42 AM IST

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும்13,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- தமிழகத்தில் குறையும் கொரோனா… சென்னையில் 1000க்கும் கீழ் குறைந்தது தொற்று!!

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்;-கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  13,615 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,96,427ஆக உள்ளது. அதிகபட்சமாக  தமிழ்நாட்டில் 2,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில், 13,265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,29,96,427ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,31,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் 24 மணிநேரத்தில் 20 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25, 474ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 199,59,536  உயர்ந்துள்ளது. 

click me!