Gujarat : குஜராத்.. சரிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு.. ஒருவர் பலி - பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

By Ansgar RFirst Published Jul 6, 2024, 10:07 PM IST
Highlights

Gujarat : குஜராத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தின், சச்சின் பாலி கிராமத்தில் பல நாட்களாக பெய்து வரும் தொடர் மழைக்கு மத்தியில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற சோக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த கட்டிடத்தில் சுமார் 30 குடியிருப்புகள் இருந்தன என்றும், அதில் 5 குடியிருப்பில் மக்கள் வசித்து வந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மலை போல கான்கிரீட் சுவர்கள் இடிந்து கிடக்கும் கோர காட்சி காண்போரை பீதியடைய செய்து வருகின்றது. மேலும் அந்த கட்டிடம் கட்டி, வெறும் 8 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Latest Videos

ஆம்ஸ்ட்ராங் கொலையால் பேரதிர்ச்சி; தமிழக அரசு இதை செய்யும் என்று நம்புகிறேன்: ராகுல்காந்தி ட்வீட்!!

இந்த கோர சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் சென்று, அதன் கீழ் உயிரோடு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீட்புப் பணிகளை வேகப்படுத்த, தேசிய பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், தங்களால் இயன்றவரை மக்களை காப்பாற்றியதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக பழமையானதாக இல்லாவிட்டாலும், அந்த கட்டடம் பாழடைந்து, பெரும்பாலான குடியிருப்புகள் காலியாக இருந்ததாக கூறியுள்ளனர். 

சூரத் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சௌரப் பார்கி கூறுகையில், "ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில். சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு பெண்ணை இடிபாடுகளில் இருந்து மீட்டோம். மேலும் நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளே சிக்கியிருக்கலாம். என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சில மணி நேரத்தில் மற்றவர்களையும் மீட்போம் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

யூனியன் பட்ஜெட் 2024-25.. மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் சீதாராமன்!

click me!