2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கவுன்சிலிங் மறு தேதி ஏதும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய தகுதித் தேர்வு மற்றும் நீட் இளங்கலை நுழைவுத் தேர்வுகளுக்கான கலந்தாய்வு மறு தேதி வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 6ம் தேதி நீட் யுஜி படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நீட் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
undefined
நீட் தொடர்பான அனைத்து மனுக்களும் வருகின்ற 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன.
இந்த மனுக்களில் சிலர் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். சிலர் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் தேசிய தேர்வு முகமையின் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..
கலந்தாய்வுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்கள் முதலில் பதிவு செய்து, தொடர்புடைய செலவுகளை செலுத்த வேண்டும். தங்கள் விருப்பங்களை நிரப்பி, இதர ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.