அன்றாடம் பயன்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைகிறது! எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

First Published Nov 5, 2017, 6:07 PM IST
Highlights
GST Council to reduce rates on common use items in meeting this week


மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், கையால் செய்யப்பட்ட ‘பர்னிச்சர்கள்’, பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி. வரி வரும் 10-ந்தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி

நாடுமுழுவதும் சரக்கு மற்று சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியாக 5, 12, 18, 28 என 4 பிரிவுகளில் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வரி மிக அதிகமாக இருப்பதாகக் கூறி பொது மக்களும், வர்த்தகர்களும், சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்களும் தொடர்ந்து அரசுக்கு புகார் தெரிவித்து வருகின்றன.

ஜி.எஸ்.டி.கவுன்சில்

ஜி.எஸ்.டி. வரி குறித்து ஆய்வு செய்து முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கொண்ட, அதிகாரம்மிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுதான் வரி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறது.

10ந்தேதி கூட்டம்

ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்தபின், மூன்று முறைகூடி. 100-க்கும் ேமற்பட்ட பொருட்களின் வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 10-ந்தேதி அசாம் மாநிலம், கவுகாத்தியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது.

வரி குறைப்பா?

அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதில் குறிப்பாக, சமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், கையால் செய்யப்பட்ட நாற்காலி, மேஜை உள்ளிட்ட பர்னிச்சர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றின் வரி மறு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

28 சதவீதம்

குறிப்பாக 28 சதவீத வரி விதிப்பில் இருக்கும் பொருட்கள் வரி குறைக்கப்படலாம். மேலும், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. முன்பாக, மூலப்பொருட்களை குறைவான விலையில் வாங்கி வந்தனர். ஆனால், ஜி.எஸ்.டி.யில் வரி அதிகம் விதிக்கப்பட்டு இருப்பதால், அதை குறைக்க கோரியுள்ளனர். ஆதலால், அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் வரி குறைப்பை எதிர்பார்க்கலாம்.

வரி குறைப்பு இருக்கும்

இது குறித்து நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர்கூறுகையில், “ 28 சதவீத வரி வீதத்தில் இருக்கும் பொருட்கள் வரி குறைப்பது குறித்து வரும் 10 ந்தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வரி குறைக்கப்பட்டு 18 சதவீதத்துக்குள் கொண்டு வரப்படும். கைகளால் செய்யப்பட்ட மரச்சாமான்கள், நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள், எலெக்ட்ரானிஸ் ஸ்விட்ஜ், பிளாஸ்டிக் பைப்ஸ் உள்ளிட்ட பொருட்களின் வரியும் மறு ஆய்வு செய்யப்படலாம்’’ என்றார்.

பர்னிச்சர்கள்

முறைசார தொழிலான கைகளால் செய்யப்படும் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை நடுத்தரமக்கள்தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பர்னிச்சர்களுக்கான வரியை குறைக்க கோரி இருப்பதால், இவற்றின் மீதான வரி குறைக்க வாய்ப்புள்ளது. 

மேலும், குளியல் அறையில் பொருத்தப்படும் ஷவர், சிங்க்ஸ், வாஷ் பேஷின், கழிவறை, வாகனங்களுக்கான சீட் கவர் உள்ளிட்டவைகளின் வரியும் குறைக்கப்படலாம்.

click me!