விரைவில் உயரப்போகுது ரெயில் டிக்கெட் கட்டணம்! 48 ரெயில்களுக்கு ‘சூப்பர்பாஸ்ட் வரி’ வசூலிக்க பிளான்!

First Published Nov 5, 2017, 5:14 PM IST
Highlights
IRCTC Train Ticket rate will be increase


48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு, ‘சூப்பர் பாஸ்ட்’ ஆக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து ‘சூப்பர் பாஸ்ட் வரி’ என்று விதித்து ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய வரியின்படி, 2-ம் வகுப்பு படுக்கை டிக்கெட் கட்டணம் ரூ. 30, 2வகுப்பு மற்றும் 3 அடுக்கு ஏசி க்கு ரூ.45, முதல்வகுப்பு ஏ.சி.க்கு ரூ.75 என கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

புதிய அட்டவணை

கடந்த 1-ந்தேதி ரெயில்வே துறை திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது. அதில் 48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ‘சூப்பர்பாஸ்ட்’ ஆக தரம் உயர்த்தப்பட்டன. அந்த ரெயில்களின் சராசரி வேகமும் மணிக்கு 5 கி.மீ கூடுதலாக்கப்பட்டு 55 கி.மீட்டராக உயர்த்தப்பட்டது.

ஆனால், அந்த ரெயில்கள் ‘சூப்பர்பாஸ்ட்டாக’ தரம் உயர்த்தப்பட்டபோதிலும், உரிய நேரத்துக்கு சென்று சேருமா என்பதற்கு உறுதி கிடையாது.

ஏற்கனவே ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரெயில்கள் அதிவேகத்தில் இயக்கப்பட்டபோதிலும், அந்த ரெயில்களும் சில நேரங்களில் சரியான நேரத்துக்கு வருவதில்லை.

48 ெரயில்கள்

இந்த 48 ரெயில்கள் சூப்பர் பாஸ்ட்களாக தரம் உயர்த்தப்பட்டபோதிலும், அதில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், சூப்பர்பாஸ்ட் வரி என்ற பெயரில் கட்டணத்தை மட்டும் வசூலிக்கப்பட உள்ளது.

ரூ.75 வரை உயரும்

இதன்படி, 2-ம் வகுப்பு படுக்கை டிக்கெட் கட்டணம் ரூ. 30, 2வகுப்பு மற்றும் 3 அடுக்கு ஏசி க்கு ரூ.45, முதல்வகுப்பு ஏ.சி.க்கு ரூ.75 என கட்டணம் அதிகரிக்கவும், இந்த வரி மூலம் கூடுதலாக ரூ.70 கோடி திரட்ட ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதையடுத்து நாட்டில் சூப்பர்பாஸ்ட் அந்தஸ்துடன் செல்லும் ரெயில்களின் எண்ணிக்கை 1072 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி. விமர்சனம்

சமீபத்தில் மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறையின்(சி.ஏ.ஜி.) அறிக்கையில், பயணிகளிடம் இருந்து சூப்பர்பாஸ்ட் வரி விதிப்பது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது.

திருப்பிக்கொடுங்கள்

அதில், சூப்பர்பாஸ்ட் ரெயில்கள் உரிய வேகத்தில் செல்லாத நிலையில் கூட பயணிகளிடம் இருந்து சூப்பர்பாஸ்ட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சூப்பர்பாஸ்ட் வேகத்தில் ரெயில்கள் செல்லாத நிலையில், அதற்குரிய கட்டணத்தை பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

வடக்கு மத்திய மற்றும் தெற்கு மத்திய ெரயில்வே துறை கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை சூப்பர் பாஸ்ட் கட்டணமாக பயணிகளிடம் இருந்து ரூ.11.17 கோடி வசூலித்துள்ளது. ஆனால், அதில் 21  ரெயில்கள் சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான வேகமான 55 கி.மீ வேகத்தை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாமதம்

அரசின் புள்ளிவிவரங்கள்படி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் 890 சூப்பர்பாஸ்ட் ரெயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. 

இதில் ஜூலையில் 129 சூப்பர்பாஸ்ட் ரெயில்களும், ஆகஸ்டில் 145 ரெயில்களும், செப்டம்பரில் 183 ரெயில்களும் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாகச் சென்றுள்ளன. இதில் ஜூலை மாதத்தில் 31 சூப்பர் பாஸ்ட் ரெயில்களும், ஆகஸ்ட் மாதத்தில்37 ரெயில்களும் 3 மணிநேரத்துக்கு மேலாக தாமதமாகச் சென்றுள்ள. இவை அனைத்தும் சூப்பர் பாஸ்ட் என்ற பெயருக்கு ஏற்றார்போல் இயக்கப்டவில்லை. 

புதிய எக்ஸ்பிரஸ்
இந்நிலையில், புதிதாக புனே-அமராவதி எக்ஸ்பிரஸ், பெங்களூர்-சிவமோகா எக்ஸ்பிரஸ், ‘ராக் போர்ட்’ சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், மும்பை -பாட்னா எக்ஸ்பிரஸ் என 10க்கும் மேற்பட்ட புதிய ரெயில்கள் சூப்பர்பாஸ்ட் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், விரைவில் சூப்பர்பாஸ்ட் வரி என்ற பெயரில் கட்டண உயர்வு இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

click me!