
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) இன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது பேசியவீடியோவை டுவிட்டரில் வௌியிட்டு காங்கிரஸ் கட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், “ நாட்டில் ஜி.எஸ்.டி. வரியை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. முறையான கட்டமைப்பு வசதிகள் இன்றி அதை நடைமுறைப்படுத்த முடியாது’’ என்று பிரதர் மோடி பேசியகாட்சிகள் உள்ளன.
புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அறிமுக விழாமத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள்,திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. கட்சி கலந்து கொள்ளவில்லை.
வீடியோ காட்சிகள்
இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது, ஜி.எஸ்.டி. வரி குறித்து பேசிய வீடியோகாட்சிகளை காங்கிரஸ் கட்சி நேற்று வௌியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தான் தலைப்பு
ஜி.எஸ்.டி.யை பற்றி பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? என்ற தலைப்புடம் இந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.
அதி பிரதமர் மோடி அப்போது பேசியதாவது “ தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா, குஜராத் அரசின் கண்ணோட்டம் என்ன என்றால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வெற்றிகரமாக செயல்படுத் முடியாது. நாட்டில் ஜி.எஸ்.டி. வரியை செயல்படுத்த ஸ்திரமான கட்டமைப்பு வசதிகள் தேவை’’ எனக் கூறுகிறார்.
இந்தியாவில் சாத்தியமே இல்லை
மற்றொரு வீடியோவில், பிரதமர் மோடி பேசுகையில், “ நாடுமுழுவதும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு முறையான இணையதள வசதி செய்து கொடுக்காமல், நாட்டில் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஏனென்றால், ஜி.எஸ்.டி. அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
சீக்கிரமே மறந்துவிட்டீர்களே...
இது குறித்து டுவிட் செய்துள்ள காங்கிரஸ் கட்சி, “ என்ன மோடி, நீங்கள் பேசிய வார்த்தைகளே நீங்களே சீக்கிரம் மறந்துவிட்டீர்கள். ஏன் நாட்டில் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்துகிறீர்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறிய பிரதமர் மோடி, இப்போது அதே ஜி.எஸ்.டி.வரியை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தி வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.