"GST குழந்தைக்கு அம்மா அப்பாவே காங்கிரஸும், திரிணாமுல் காங்கிரஸும்தான் : ஆதாரங்களால் கிழியும் எதிர்கட்சிகளின் முகத்திரை!!

 
Published : Jun 30, 2017, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
"GST குழந்தைக்கு அம்மா அப்பாவே காங்கிரஸும், திரிணாமுல் காங்கிரஸும்தான் : ஆதாரங்களால் கிழியும் எதிர்கட்சிகளின் முகத்திரை!!

சுருக்கம்

congress is the father of GST

பார்லிமெண்டில் இன்று நள்ளிரவு ஜனாதிபதி முதல் எம்.பி.க்கள் வரை அத்தனை பேரும் கலந்து கொள்ள  கோலாகலமாக துவங்குகிறது ஜி.எஸ்.டி. ஒரு அபீஷியல் நைட் பார்ட்டியாக ஒரு வரிவிதிப்பு ஆரம்பமாவது நம் தேசத்துக்கு புதிதான். 

நாளை ஜூலை 1 முதல் இந்தியாவை ஆக்கிரமிக்க இருக்கும் இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை பற்றி தேச மக்களில் எத்தனை சதவீதம் பேர் புரிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே! ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாயை ஒழித்தபோது ‘பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்ற மாற்றத்தை இந்த நடவடிக்கை கொண்டு வரும்.

கள்ள நோட்டு புழக்கம் அறவே ஒழியும்.’ என்று சீன் போட்டது சென்ட்ரல் கவர்மெண்ட். ஆனால் பொது மக்களின் கண்ணும், புத்தியும் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையான எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான இந்த ஜி.எஸ்.டி. எனப்படும் ‘ஒற்றை வரி’ முறை அமலாகிறது. 

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் இதன் துவக்க விழாவில் திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கின்றன. 

‘மிகவும் அவசர கதியில் அமல்படுத்துவதாலும், பொதுமக்களின் பல்வேறு அச்சங்களுக்கு சரியான பதில் அளிக்காததாலும் ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் பங்கேற்பதில்லை.” என்று காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் சதுர்வேதி அக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

ஆனால் காங்கிரஸின் இந்த ‘புறக்கணிப்பு’ நிலைப்பாட்டை ’பா.ஜ.க. மீதான பொறாமை அரசியலே தவிர பொதுமக்கள் மீதான அக்கறையின் விளைவாக எடுத்துக் கொள்ள முடியாது . ஏனென்றால் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கு விதை போட்டதே காங்கிரஸ்தான்.’ என ஷாக் தருகின்றனர். அரசியல் பார்வையாளர்கள்.

இது குறித்து விரிவாக பேசும் அவர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை இன்று எதிர்த்து அரசியல் செய்யும் காங்கிரஸும், திரிணமுல்லும் இந்த வரிவிதிப்பு உருவாக்கத்தில் எந்தளவுக்கு முக்கிய பங்காற்றினார்கள் என்பதை பாயிண்ட் பை பாயிண்டாக விவரிக்கின்றனர் இப்படி...”1986ல் ராஜீவ் காந்தி அரசியில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங் முதன் முதலாக வரி சீர்திருத்த முயற்சியை துவக்கினார். மதிப்பு கூட்டு வரி உருவாக்கப்பட்டது. இதுதான் ஜி.எஸ்.டி. பிறப்பதற்கான தளமாக மாறியது. 

அதன் பின் 1999_ல் வாஜ்பாய் அரசு இந்த வரிவிதிப்பிற்கான கருவை உருவாக்கியது. 

2000_ல் மேற்கு வங்க மாநில நிதியமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சீம் தாஸ்குப்தா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அமைவில் வாஜ்பாயின் பங்கு அதிகம்.

இதன் பின் காங்கிரஸ் ஆட்சி வந்தது. அசீம்தாஸ் குப்தா அந்த கமிட்டியின் தலைவராக நீடிப்பதை பலர் எதிர்த்தனர். ஆனால் எகனாமிகல் எக்ஸ்பர்ட் ஆன மன்மோகன் குப்தாவை மாற்ற மறுத்தார். 

மேற்கு வங்கத்தில் 2011ல் மம்தா ஆட்சி வந்த பிறகு அசிம்தாஸ் குப்தா ஜி.எஸ்.டி. கமிட்டியின் பதவியை துறந்தார். இதனால் இந்த வரி உருவாக்க கட்டமைப்பில் சரிவு ஏற்பட்டது.

கேரளாவில் உம்மன் சாண்டி அரசின் நிதியமைச்சராக இருந்த கே.எம்.மாணி ஜி.எஸ்.டி. கமிட்டியின் தலைவரானார். 

மாணி இந்த வரி விதிப்புக்கு இறுதி வடிவம் கொடுத்தார். வர்த்த சங்கங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு பல முடிவுகள் எட்டப்பட்டதெல்லாம் இந்த சமயத்தில்தான். ஆனாலும் ஊழல் குற்றச்சாட்டில் மானி பதவி விலகியதால் ஜி.எஸ்.டி. உருவாக்கம் தேங்கியது. 

பின் அருண் ஜெட்லி இதை கையிலெடுத்து விரைவுபடுத்தினார். 

இதன் பின் ஜி.எஸ்.டி. கமிட்டி தலைவர் பதவியானது மேற்கு வங்க மாநில நிதியமைச்சரான திரிணமுல் காங்கிரஸின் அமித் மிஸ்ராவின் கைகளுக்கு போனது. அமித் மிஸ்ரா ஜி.எஸ்.டி.யை வடிவமைப்பதில் மிக முக்கிய நிலையை  எட்டினார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 2005_ல் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பை செயல்படுத்த விரும்பி திட்டமிட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. 

2010ல் மீண்டும் இந்த கூட்டணி பதவிக்கு வந்தபோது நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி இந்த வரி விதிப்பை செயல்படுத்திட பலமாக முயன்றார். ஆனால் எதிர்ப்பு வலுத்ததால் அவர் பின்வாங்கினார். 

இதன் பின் வந்தமர்ந்த மோடி அரசு வந்த வேகத்திலேயே ஜி.எஸ்.டி. அமலுக்கு துடித்தது. 2015 பிப்ரவரி, 2016 ஏப்ரல் என இரண்டு வருடங்களிலும் இந்த வரி விதிப்பு அமலாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டு தள்ளிப்போய்விட்ட நிலையில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

இதுதான் ஜி.எஸ்.டி. கருவாகி பின் முழுமையாக உருவாக கடந்த வந்த பாதை. 

ஆக வெற்று அரசியலுக்காக இன்று இதை எதிர்க்கும் காங்கிரஸும், திரிணமுல்லும் இந்த வரி விதிப்பின் உருவாக்கத்தில் காட்டியுள்ள பங்களிப்பு  இப்போது புரிகிறதா! இந்த வரி விதிப்பில் திருத்தங்களை கொண்டு வர சொல்லி குரல் கொடுக்கும் மார்க்சிஸ்டும் இந்த வரியின் உருவாக்கத்தில் பங்கெடுத்திருப்பதை கவனியுங்கள். 

ஆக எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய ஏதாவது தேவை. அதற்காக எந்த உண்மையையும் மறைத்துவிட்டு குரல் கொடுக்க தயாராகிவிடுகிறார்கள். 

ஆனால் இதோ கிழிந்துவிட்டதா காங்கிரஸ் மற்றும் திரிணமுல்லின் முகத்திரை!” என்று நச்சென்று கேட்கிறார்கள். 

அடப்பாவீங்களா! இன்னைக்கு நைட்ல டெலிவரியாக போகும் ஜி.எஸ்.டி.க்கு அப்பனும் ஆத்தாளுமா இருந்தவுகளே இன்னைக்கு அதை அநாதையாட்டமா ஒதுக்குறது எந்த ஊரு நியாமுங்னா!?

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்