ஜி.எஸ்.டி.க்கு அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

First Published Jun 30, 2017, 2:09 PM IST
Highlights
Dont fear about GST by Minister Jayakumar


ஜி.எஸ்.டி. வரி குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பங்கேற்க செல்லும் முன் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது பேசியதாவது:

ஜி.எஸ்.டி. வரி குறித்து யாரும் பயம்கொள்ள தேவையில்லை. இதனால் விலைவாசி குறையும்.

மேலும் இது மூலம் மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை மத்திய அரசு ஏற்கவேண்டும் என கவுன்சிலில் கேட்டுள்ளோம்.

அதை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். கவுன்சில் என்பது எப்போதுமே இருக்கும் தேவைபடும் நேரத்தில் மாற்றங்கள் குறித்து பேசுவோம்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் அரசு சார்பில் மாவட்டம் தோறும் நடத்தி வருகிறோம். 

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

மேலும், பால் கலப்படம் குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார். எம்.ஜி.ஆர்.

நூற்றாண்டு விழாவினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளளோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

click me!