மத்திய அமைச்சரவையிடம் ஜி.எஸ்.டி. மசோதா வரும் 22-ல் தாக்கல்

 
Published : Mar 08, 2017, 05:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மத்திய அமைச்சரவையிடம்  ஜி.எஸ்.டி. மசோதா வரும் 22-ல் தாக்கல்

சுருக்கம்

After the publication of election results in Uttar Pradesh gst bill will pass

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், வரும் 22-ந்தேதி ஜி.எஸ்.டி. மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

கவுன்சில்

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில்அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 11-வது கூட்டங்களில் 4 வகையான 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒப்புதல்

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை நடந்த 11 ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில், முக்கிய வரைவு சட்டங்களான மத்திய ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

16-ந்தேதி கூட்டம்

வரும் 16-ந்தேதி தொடங்கும் 12-வது கூட்டத்தில் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டத்துக்கும் ஒப்புதல் பெறப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை

இந்நிலையில்,ஜி.எஸ்.டி. துணைச் சட்டங்களான மாநில ஜி.எஸ்.டி. மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. ஆகியவை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வரும் 22-ந்தேதி நிதி அமைச்சகம் தாக்கல் ெசய்யும் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், மாநிலங்களுக்கான இழப்பீட்டுச் சட்டம், மத்திய ஜி.எஸ்.டி. சட்டம், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் ஆகியவை வரும் 27-ந்தேதி தாக்கல் ஆகும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள் ஜி.எஸ்.டி. மசோதாக்களை நிறைவேற்றி, ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு கொண்டு வருவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

டெல்லியில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு! அடல் கேன்டீனில் தடபுடல் மெனு!
ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!