முற்றிலும் பெண்களால் இயக்கப்பட்ட முதல் விமானம் - 50 பேருக்கு இலவச ‘ஜாலி டூர்’

First Published Mar 8, 2017, 3:54 PM IST
Highlights
To celebrate Womens Day in historical terms From San Francisco to New Delhi for 10 days or more than one woman in 10 will be completely plane Enabled


மகளிர் தினத்தை வரலாற்று சிறப்பு மிக்க வகையில் கொண்டாடும் வகையில்,  சான்பிரான்சிஸ்கோமுதல் டெல்லி வரை 10 நாட்களாக முற்றிலும் 10 மேற்பட்ட பெண் பணியாளர்கள் இருக்கும் விமானம்  இயக்கப்பட்டது.

உலகம் முழுவதும் மகளிர்தினம் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை வித்தியாசமான கொண்டாட நினைத்த ஏர் இந்தியா நிறுவனம், விமானி முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்களை இ ருக்கும் வகையில் ஒருவிமானத்தை இயக்க திட்டமிட்டது.

அதன்படி, கடந்த 27-ந்தேதி அதிகாலை சான்பிரான்சிஸ்கோ வழியாக பசிபிக் நாடுகளக்கு போயிங்777-200 எல்.ஆர். என்ற விமானத்தை இயக்கியது.

இந்த விமானத்தை இயக்கிய விமானி, துணை விமானி, பணியாளர்கள் என அனைத்தும் பெண்கள் தான். இந்த விமானம் வியன்னா, நியூயார்க், லண்டன், காத்மாண்டு, சிங்கபூர் என சர்வதேச நாடுகளைச் சுற்றி, அலகாபாத், பாட்னா, ஜெய்பூர் சென்று நேற்று புதுடெல்லி, இந்திராகாந்தி விமான நிலையத்தை அடைந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை முடிந்து வந்த பெண் விமானிகள், பணியாளர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை மேலாளர் அஸ்வானி லோகானி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மத்திய தலைமை மேலாளர் அஸ்வானி லோகானி கூறுகையில், “ ஒவ்வொரு சமுதாயமும், ஒவ்வொரு மனிதரும் பெண்களை மதிக்க வேண்டும். இந்த நேரம் ஏர் இந்தியாவுக்கு மிகவும் பெருமை கொள்ளும், மரியாதைக்குரிய தருணமாகும். முற்றிலும் பெண்களே இயக்கி, விமானம் மூலம் உலகைச் சுற்றி வந்து விமானத்துறையில் சரித்தரம் படைத்துள்ளனர்'' என்றார்.

50 பேருக்கு ‘ஜாலி பயணம்’

 சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களில் வேலை பார்த்த போதும் விமானத்தில் பயணம் செய்யாமல்  பல பெண்கள் உள்ளனர்.  அந்த வகையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும், விமான பயணம் செய்யாத பெண் ஊழியர்களை தேர்வு செய்து இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்தது.   அந்த வகையில் 50 பெண் ஊழியர்கள் ஏ.டி.ஆர்.-72 என்ற சிறப்பு விமானம் மூலம் டெல்லி முதல் ஆக்ராவிற்கு ‘ஜாய் ரைட்’ என்ற பெயரில் பயணம் செய்தனர். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த ஜாலி பயணம் அமைந்திருந்தது.

click me!