“இனி மளிகை பொருட்களை செல்போன் மூலம் வாங்கலாம்..!!!” – மோடி உரை

First Published Nov 25, 2016, 1:19 PM IST
Highlights


பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

அனைவருக்கும் தரமான மருத்துவமனைகள், பள்ளி கட்டிடங்கள் கட்டி தர வேண்டியது அவசியம். ஆட்சியில் இருக்கும்போதே அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என மோடி உறுதியளித்தார்.

நாட்டில் உள்ள கறுப்பு பணம் புற்றுநோயை போல மக்களை அரித்து கொண்டிருக்கிறது. கருப்பு பணத்திலிருந்து நாட்டை காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர்மையான வழியில் பணத்தை சம்பாதித்தவர்க்ள அரசின் முடிவை ஆதரிக்கின்றனர்.

எனவே, கருப்பு பண ஒழிப்பிற்கு எதிராக சாமான்யர்களும் இணைந்து போராட வேண்டும், ஏழை மக்களின் உரிமைகள் அனைத்தும் அவர்களை சென்றடையவேண்டும். ஏழைய எளிய மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சியை அனைவரும் வரவேற்க வேண்டும்.

மேலும், நாட்டில் உள்ள குடும்பங்களை காட்டிலும் மொபைல் போன் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மொபைல் போன் மூலமாக பண பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள்.

சில்லறை வர்த்தகத்தை கூட செல்போனிலேயே மேற்கொள்ளுங்கள், மளிகை பொருட்களை கூட மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வாங்கி கொள்ளலாம். மின்னணு பரிவர்த்தனை தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுங்கள் என மோடி தெரிவித்தார். 

 

click me!