மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு !

By Raghupati R  |  First Published Sep 28, 2022, 3:23 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%  அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அரச ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது.

இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!

Tap to resize

Latest Videos

இது தற்போது 4 சதவீதம் அதிகரித்த பின்னர், 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் இந்த முடிவால் தற்போதுள்ள 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !

இதன்படி, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் இரண்டு மாத டிஏ அரியர் கிடைக்கும். அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்ததால், ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். ஜூலை 1 ஆம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களின் 4 % அகவிலைப்படி உயர்வு.. அறிவிப்பு எப்போது வெளியாகும்..? முக்கிய தகவல்

click me!