லதாமங்கேஷ்கரின் 93 வது பிறந்த நாளில், நினைவு சதுக்கம், 40 அடி வீணை.. உ.பியில் மாஸ் காட்டிய மோடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2022, 1:59 PM IST
Highlights

பிரபல பாடகி, இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி  அவரின் புகழை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும், அயோத்தியில் உள்ள  ராம்நகர் நயாகட் சாலை சந்திப்புக்கு லதா மங்கேஷ்கர் பெயரில் நினைவு சதுக்கும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இன்று முதல் அது லதா மங்கேஷ்கர் சதுக்கம் என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரபல பாடகி, இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி  அவரின் புகழை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும், அயோத்தியில் உள்ள  ராம்நகர் நயாகட் சாலை சந்திப்புக்கு லதா மங்கேஷ்கர் பெயரில் நினைவு சதுக்கும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இன்று முதல் அது லதா மங்கேஷ்கர் சதுக்கம் என்று அழைக்கப்படும் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இது லதா ஜீக்கு பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்றும் மோடி கூறியுள்ளார்.

செப்டம்பர் 28 ,1929 ஆம்  ஆண்டு பிறந்த லதா மங்கேஷ்கர், 1942 ல் தனது 13 வயதிலேயே தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மெல்லிசை ராணியாக,  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடாத மொழிகளே இல்லை என்று கூறலாம், நாட்டில் மொத்தம் 36 பிராந்திய மொழிகளிலும் அவர் தனது இனிய குரலில் கீதம் பாடியுள்ளார். இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் இசை இராணி, மெல்லிசை ராணி, இந்தியாவின் நைட்டிங்கேல், இசைக்குயில், கானக் குயில் என பல பெயர்களில் அவர் வர்ணிக்கப்பட்டாலும் கடவுளின் குரல் என்பதே அனைத்து தரப்பு மக்களின் அன்பு மொழியாக இருந்துவருகிறது. இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் பெயருக்கான நினைவு சதுக்கப் திறப்பு விழா இன்று நடைபெற்றது. உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் அந்த சதுக்கத்தை திறந்து வைத்துள்ளனர். 

லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி லதா மங்கேஷ்கர் குறித்து பேசியுள்ளார் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா காலை 10:50 மணிக்கு தொடங்கியது, இதற்காக  ராம் கதா பூங்கா ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சதுக்கத்தில் 14 டன் எடையுள்ள 40 அடி உயர வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மாபெரும் சிற்பத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதாகர் வடிவமைத்துள்ளார்.

 

Remembering Lata Didi on her birth anniversary. There is so much that I recall…the innumerable interactions in which she would shower so much affection. I am glad that today, a Chowk in Ayodhya will be named after her. It is a fitting tribute to one of the greatest Indian icons.

— Narendra Modi (@narendramodi)

அதில் சரசுவதி தேவியின் படம் இடம்பெற்றுள்ளது, இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மோடி, மறைந்த சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன், இத்தனை ஆண்டுகளில் எண்ணற்ற முறை அவரிடம் உரையாடியுள்ளேன், என்னை சந்திக்கும் போதெல்லாம் அன்பு மழை பொழிவார், அவரைப் பற்றி நினைவு கூறுவதற்கு பல விஷயங்கள் உள்ளது. அவரது பெயரில் அயோத்தியில் உள்ள ஒரு  சாலை சந்திப்புக்கு அவரது பெயர் இன்று சுட்டப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டில் சிறந்த அடையாளச் சின்னங்களில் ஒருவரான அவருக்கு செலுத்தும் உரிய மரியாதை இது என்று கருதுகிறேன், இது சரியான அஞ்சலியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

click me!