1 pfi ban notification: பிஎப்ஐ தடை: எந்தெந்த மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரியுமா?

By Pothy Raj  |  First Published Sep 28, 2022, 1:41 PM IST

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும், அதுசார்ந்த துணை அமைப்புகளுக்கும் சட்டவிரோதத் தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு 5 ஆண்டுகள் விதித்துள்ளதை பல்வேறு மாநில முதல்வர்கள் வரவேற்றுள்ளனர். 


பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும், அதுசார்ந்த துணை அமைப்புகளுக்கும் சட்டவிரோதத் தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு 5 ஆண்டுகள் விதித்துள்ளதை பல்வேறு மாநில முதல்வர்கள் வரவேற்றுள்ளனர். 

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 19 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் இரு கட்டங்களாக பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். 

Tap to resize

Latest Videos

பிஎப்ஐக்கு தடை: 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்! அஜ்மீர் தர்ஹா தலைவர் வரவேற்பு

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 19மாநிலங்களி்ல் இருந்து 200க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர், அது தொடர்பான அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிஎப்ஐ அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் என்ன? பட்டியலிடும் மத்திய அரசு

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதுசார்ந்த 8  துணை அமைப்புகளுக்கு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவுக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே:

பிஎப்ஐ அமைப்பும், அதுசார்ந்த அமைப்புகளும் பல்வேறு தீவிரமான குற்றங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக தீவிரவாதச் செயலுக்கு நிதி திரட்டுதல், கொலை, அரசியலமைப்புச்சட்டத்தை அவமதித்தல், சமூக ஒற்றுமையைக் குலைத்தல், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் பிஎப்ஐஅமைப்பு ஈடுபட்டது. மகாராஷ்டிராவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவும் இந்தஅமைப்பு திட்டமிட்டிருந்தது. 

சமூக விரோத சக்திகள், தேசத்துக்கு எதிரான செயல்களைச் செய்து, சமூகத்தை பிரிக்கும் செயலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டுகள் தடை: எந்தெந்த அமைப்புகள்? மத்திய அரசு அதிரடி

அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா:

ட்விட்டரில் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா பதிவிட்டகருத்தில் “இந்தியாவுக்கு எதிரான கொடூரமான, பிளவுபடுத்தும் அல்லது சீர்குலைக்கும் வடிவமைபுடன் வலம் வருவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்பதை மத்தி அரசு உறுதி செய்துள்ளது. மோடியின் சகாப்தத்தில் இந்தியா தீர்க்கமாகவும், துணிச்சலாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

பிஎப்ஐ அமைப்பை தடை செய்தததன் மூலம் தேசவிரோத குழுக்கள் அனைத்துக்கும் இந்த தேசத்தில்ல நீங்கள் நீடிக்க முடியாது என்று மத்திய அரசு செய்தி அனுப்பியுள்ளது. பிஎப்ஐ அமைப்பை தடை செய்யவது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்தது.

சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கோரின. சிமி அமைப்பின் மறு அவதாரம்தான் பிஎப்ஐ, கேஎப்டி. தேசவிரோத செயலிலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். பின்புலத்தில் ஏராளமான வேலைகள், வழக்குகள் ஆய்வு, தகவல்கள் திரட்டப்பட்டு பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மத்திய அரசு சரியான முடிவை எடுத்துள்ளது. இந்த அமைப்புகளோடு தொடர்பு கொள்ளாதீர்கள் என மக்களை வலியுறுத்துகிறேன்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிஎப்ஐ அமைப்பை தடை செய்த மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கக்கூடியது, துணிச்சலானது. பிஎப்ஐ மற்றும் அது சார்ந்த அமைப்புள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டன. புதிய இந்தியாவில் நாட்டின்ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தீவிரவாதிகள், கிரிமினல்கள், தீவிரவாத அமைப்புகள் யாவரும் ஏற்கப்படமாட்டார்கள் 

நரோட்டம் மிஸ்ரா(மத்தியப்பிரதேச உள்துறைஅமைச்சர்)

பிஎப்ஐ அமைப்புக்கும், துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது என்பது நமது தேசத்தின் மக்கள் பாதுகாப்புக்காக உள்நாட்டில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலாகும். தேசவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்தஇந்த தடை அவசியமானது.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிஎப்ஐ நிர்வாகிகள் பல்வேறு மதங்களுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்க முயன்றனர். அதனால்தான் மாநிலத்திலும், தேசியஅளவிலும் வகுப்புரீதியான பதற்றம் ஏற்பட்டது. கேரளா,கர்நாடகாவில் பிஎப்ஐ அமைப்பினர் நேரடியாகவே கொலை வழக்குகளில் ஈடுபட்டனர், அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

click me!