Vehicle Scrap Policy:15 ஆண்டுகள் பழமையான அரசு பஸ், லாரிகளை ஏப்ரல் 1 முதல் இயக்கத் தடை: மத்திய அரசு அதிரடி

By Pothy Raj  |  First Published Jan 19, 2023, 12:55 PM IST

15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின், மாநில அரசுகளின், யூனியன் பிரதேசங்களின் வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் இயக்க அனுமதிக்கப்படாது, அதன் உரிமம் புதுப்பிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின், மாநில அரசுகளின், யூனியன் பிரதேசங்களின் வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் இயக்க அனுமதிக்கப்படாது, அதன் உரிமம் புதுப்பிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 1989ல் திருத்தம் செய்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படும், அதன் உரிமங்களும் புதுப்பிக்கப்படாது.

Tap to resize

Latest Videos

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ராஜினமா செய்வதாக திடீர் அறிவிப்பு:பின்னணி என்ன?

இது தொடர்பாக கடந்த 2022, நவம்பர் 24ம் தேதி மத்திய நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டு, வரைவு மசோதாவும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கை மீது மக்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மத்திய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின்படி புதிய விதிகள் ஏப்ரல் 1, 2023 அன்று அமலுக்கு வருகின்றன.

மத்திய அரசு வாகனங்கள் அல்லது மாநில அரசின் வாகனங்கள், அல்லது யூனியன் பிரதேசத்துக்கு சொந்தமான அரசு வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வாகனங்களின் உரிமம் புதுப்பிக்கப்படாது, அவற்றை சாலையில் இயக்கவும் கூடாது. 

அதுமட்டுமல்லாமல் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுவரும் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களை இயக்கவும் கூடாது, அவற்றின் உரிமத்தை புதுப்பித்தலும் கூடாது.

இவரைப் போலத்தான் நம் அரசியலுக்குத் தேவை! நியூசிலாந்து பிரதமரைப் புகழ்ந்த காங்கிரஸ்

இதில் ஜீப், குப்பை அள்ளும் லாரி, டிரக், டிராக்டர், குடிநீர் லாரி, உள்ளிட்ட அனைத்தும் அடங்கும் 
மேலும், சாலைப் போக்குவரத்துக் கழகச் சட்டம் 1950, கம்பெனிச்சட்டம்2013ன் கீழ், மாநில அரசு  போக்குவரத்துக் கழகங்களில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய பேருந்துகள், அதிகாரிகளுக்கான வாகனங்களும் இயக்கப்படக்கூடாது, அவ்வாறு இருந்தால் அந்த வாகனங்களின் உரிமத்தையும் புதுப்பிக்கக்கூடாது.

மத்திய அரசால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் நிறுவனங்கள், வாரியங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது, அவற்றின் உரிமத்தையும் புதுப்பிக்கக் கூடாது.

ஒருவேளை 15 ஆண்டுகள் முடியும் முன்பே வாகனங்களின் உரிமம் புதுப்பிக்கப்பட்டிருந்தால், பதிவு முதல்முறையாக செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 ஆண்டுகள் முடியும்போது தானாகவே உரிமம் ரத்தாகும். இந்த விதிமுறைகள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பி்ல இருக்கும் வாகனங்கள், ராணுவம், பாதுகாப்பு துறையில் இருக்கும் வாகனங்களுக்குப் பொருந்தாது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் மத்திய அ ரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. 

2021, மோட்டார் வாகனச் சட்டத்தின் ஸ்கிராப் பாலிசியின்படி, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அனைத்தையும் உடைத்து பயன்பாட்டில் இருந்து அகற்ற வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!