டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்துக்குள்ளான நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன
தேசிய தலைநகர் டெல்லியின் சராய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் இன்று தடம் புரண்டன. இன்று காலை 11:50 மணியளவில் ஜாகிரா மேம்பாலத்தின் கீழ் ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீட்பு பணிக்காக ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
दिल्ली के सराय रोहिल्ला स्टेशन के पास मालगाड़ी के डिब्बे अचानक से उतरे..कई लोगों के घायल होने की आशंका
Report by pic.twitter.com/TxbZUKGKUa
undefined
தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில் மும்பையில் இருந்து சண்டிகருக்கு இரும்புத் தகடு ரோல்களை ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இந்த ரயில் தடம்ப் புரண்டதால் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சரக்கு ரயில் தடம் புரண்டது தொடர்பான வியத்தகு காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது ரயில்வே மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..