மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சமீபத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே Z+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு Z+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநில பாதுகாப்பு அதிகாரிகளுடன், சிஆர்பிஎஃப் வீரர்களும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
அவரது வசிப்பிடத்தில் துப்பாக்கி ஏந்திய 8 சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சமீபத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே Z+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது.
பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: கட்சியின் தலைவராகத் தொடர்வாரா ஜே.பி.நட்டா?
ராகுல் காந்தியின் பாரத நியாய யாத்திரையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை மோடி காப்பியடித்தார் என்றார். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் மூலம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியது காங்கிரஸ்தான் என்ற அவர், பசுமைப் புரட்சி மற்றும் சுவாமிநாதனின் பங்களிப்பை மனதில் கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி சுவாமிநாதனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாகவும் கூறினார்.
"கர்நாடகா, தெலுங்கானா தேர்தல்களில் ஐந்து வாக்குறுதிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றோம். இப்போது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மோடி நகலெடுக்கிறார். எங்களைப் பொறுத்தவரை கட்சியின் சார்பில்தான் வாக்குறுதிகள் அறிவிக்கிறோம். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அவை மோடிக்குதான் சொந்தம். இது அவரது எதேச்சதிகார குணத்தைக் காட்டுகிறது" என்றார்.
மக்களை தவறாக வழிநடத்தும் பொய்களின் அதிபதி மோடி என்றும் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஐந்து தலித்துகள் மற்றும் பழங்குடியினர் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கார்கே சாடியுள்ளார்.
எலக்ட்ரிக் கார் விலை இவ்ளோ குறைஞ்சிருச்சா! புதுசா கார் வாங்குறவங்களுக்கு நிறைய ஆப்ஷன் இருக்கு!