"அமித்ஷாவின் பேச்சை கேட்டால் மகாத்மாவே விழுந்து விழுந்து சிரிப்பார்" - காந்தியின் பேரன் நக்கல்

First Published Jun 11, 2017, 4:41 PM IST
Highlights
gandhi grandson reply to amitsha speech


மகாத்மா கந்தியை பற்றி பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா விமர்சித்து பேசினார். இதற்கு, அந்த பேச்சை கேட்டால், காந்தியை விழுந்து விழுந்து சிரிப்பார் என அவரது பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கூறியுனார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜத தலைவர் அமித்ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அப்போது மகாத்மா காந்தியை புத்திசாலியான வணிகர் என்றார். குஜராத்தில் வணிகத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை 'பனியா' என்று குறிப்பிடுவார்கள். காந்தியும் பனியா வகுப்பை சேர்ந்தவர் என்பதால் 'சதுர் பனியா' (புத்திசாலி வணிகர்) என பேசினார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜாதி - மதம் - இனம் என்பதற்கு எதிராக போராடாமல், நாட்டின் தேசப்பிதா காந்தியை பற்றி பேச கூடாது. ஜாதி கண்ணோட்டத்தில் மகாத்மா காந்தியையே பார்க்கின்றனர். இதன் மூலம் பாஜகவின் கொடூர குணம் வெளிப்பட்டுவிட்டது என குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து, காந்திஜியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி கூறும்போது, எனது தாத்தா காந்தி, தன்னை பற்றி விமர்சித்து வெளியாகும் கேலி சித்திரங்களை கண்டு ரசிப்பதுடன் சிரிப்பார். அதுபோல் அமித்ஷாவின் கருத்தை கேட்டிருந்தால், அதன் சுவையில்லாத தன்மை, குறும்புத்தனமான பேச்சு ஆகியவற்றை கண்டு விழுந்து விழுந்து சிரித்திருப்பார் என்றார்.

click me!