#UnmaskingChina: எல்லையில் சீனா செய்த திருட்டுத்தனம்... முகமூடியை அம்பலப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்!

By Asianet TamilFirst Published Jun 19, 2020, 8:42 AM IST
Highlights

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்த இயற்கையான நிலைமையை சீனப் படையினர் மாற்ற முயன்றதால்தான் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கல்வான் ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்து அல்லது அதை மாற்றி அமைக்கவோ சீனா முயன்றதாக டெல்லியில் உள்ள ஆங்கில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கில் சீன புல்டோசர்கள் பயன்பாட்டில் இருந்ததையும், அதன் ஓட்டத்தை மாற்றிவிட்டிருப்பதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. 

எல்லையில் தாக்குதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு ஆற்றின் போக்கை சீனப் படையினர் மாற்றம் செய்தது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சில தினங்களுக்கு முன்பு இந்திய வீரர்கள் மீது சீனப் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதேபோல சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், சீனா இதை உறுதிப்படுத்தவில்லை. சீனப் படையினர் இந்திய வீரர்களை ஆணி பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகளால் அடித்து கொன்றதாகவும், குன்றிலிருந்து தூக்கியெறிந்து கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.


இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்த இயற்கையான நிலைமையை சீனப் படையினர் மாற்ற முயன்றதால்தான் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கல்வான் ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்து அல்லது அதை மாற்றி அமைக்கவோ சீனா முயன்றதாக டெல்லியில் உள்ள ஆங்கில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கில் சீன புல்டோசர்கள் பயன்பாட்டில் இருந்ததையும், அதன் ஓட்டத்தை மாற்றிவிட்டிருப்பதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மேலும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கல்வான் ஆற்றங்கரையில் சீனாவின் லாரிகள், சீனப் படையினரின் நடமாட்டம், புல்டோசர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 
இதன்மூலம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தப் பிரச்னையின் பின்னணியில் சீனா ஒருதலைபட்சமாக அத்துமீறி நடந்துகொண்டதை உணர முடிகிறது. 

click me!