டெல்லியில் G20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பை முன்னிட்டு, நகரின் சில மெட்ரோ நிலையங்களுக்குள் செப்டம்பர் 8-10 வரை நுழையவோ வெளியேறவோ முடியாது.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் 18வது ஜி20 உச்சி மாநாடு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் அதிகாரிகள் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பிரதிநிதிகளை வரவேற்க விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர், இதில் 25 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலகளாவிய நிறுவனத் தலைவர்கள் அடங்குவர்.
உச்சிமாநாட்டின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, டெல்லி காவல்துறையும் டெல்லி மெட்ரோவை இயக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும் செப்டம்பர் 8 முதல் 10 வரை பாதுகாப்பு காரணங்களுக்காக சில மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
undefined
காவல்துறை பிறப்பித்த உத்தரவின்படி, மோதி பாக், பிகாஜி காமா பிளேஸ், முனிர்கா, ஆர்.கே.புரம், ஐஐடி, சதர் பஜார் கண்டோன்மென்ட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். பயணிகள் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் நுழையவோ வெளியேறவோ முடியாது.
இதற்கிடையில், தவுலா குவான், கான் மார்க்கெட், ஜன்பத், சுப்ரீம் கோர்ட் மற்றும் பிகாஜி காமா பிளேஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களை போலீசார் முக்கியமான இடங்கள் பட்டியலில் வைத்துள்ளனர். மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் இருக்கும் உச்சநீதிமன்றத்தின் மெட்ரோ ரயில் நிலையமும் முற்றிலும் மூடப்படும். குறிப்பிட்ட நுழைவாயில்கள் தவிர, டெல்லி மெட்ரோ வழக்கம் போல் இயங்கும்.
டெல்லி விமான நிலையம் நோக்கிச் செல்லும் பயணிகள் வரும் 7ம் தேதி இரவு முதல் 11ம் தேதி மாலை வரை மெட்ரோ ரயிலை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, செப்டம்பர் 4 முதல் 13 வரை, 36 நிலையங்களில் பிரத்யேக கவுண்டர்கள் மூலம் 'டூரிஸ்ட் ஸ்மார்ட் கார்டுகளை' விற்பனை செய்யப்போவதாக டெல்லி மெட்ரோ அறிவித்து இருந்தது.
இந்த 'டூரிஸ்ட் ஸ்மார்ட் கார்டுகள்' வழக்கமான நாட்களிலும் கிடைக்கும், ஆனால் G20 உச்சி மாநாட்டைக் கருத்தில் கொண்டு, பிரத்யேக கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை தொடங்கி 10 நாட்களுக்கு இந்த கார்டுகளை விற்பனை செய்யத் தொடங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் கேட், சாந்தினி சௌக், சாவ்ரி பஜார், புது டெல்லி, ராஜீவ் சௌக், படேல் சௌக், மத்திய செயலகம், உத்யோக் பவன், லோக் கல்யாண் மார்க், உச்சநீதிமன்ற மெட்ரோ நிலையங்களில்உள்பட 36 ஸ்டேஷன்களில் இந்த கார்டுகள் பிரத்யேக கவுண்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இதற்கிடையில், டெல்லி போக்குவரத்து காவல்துறையும், தேசிய தலைநகரில் போக்குவரத்து இயக்கம் குறித்த விரிவான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.