டெல்லியில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பாலத்தின் மீது ஆட்டோவை ஒட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புது டெல்லியில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் தனது ஆட்டோவை நெரிசலான பாலத்தில் ஓட்டிச் சென்றார். ஹம்தர்த் நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஃபுட் ஓவர் பிரிட்ஜின் கீழே உள்ள சாலையில் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் நெரிசலில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
undefined
போக்குவரத்தைத் தவிர்க்கும் முயற்சியில், 25 வயதான முன்னா என அடையாளம் காணப்பட்ட டிரைவர், ஒரு நடைபாதையில் ஆட்டோவை ஏற்றி, பின்னர் அதை ஃபுட் ஓவர் பிரிட்ஜின் படிக்கட்டுகளில் ஏற்றினார். வீடியோவில், பாலத்தின் மீது ஓட்டுநர் ஓட்டிச் சென்றபோது ஆட்டோரிக்ஷா காலியாக இருந்தது. பாலத்தில் இருந்த பாதசாரிகள், இந்த செயலால் திகைத்து, அதை கடந்து செல்ல வழி செய்தனர்.
டெல்லியில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பாலத்தின் மீது ஆட்டோவை ஒட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். pic.twitter.com/uwMdcuH5ns
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, டெல்லி போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். சங்கம் விகாரில் வசிக்கும் 25 வயது டிரைவரை கைது செய்தனர். அவருக்கு உதவியாக ஆட்டோவிற்குள் குதித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் சங்கம் விகாரைச் சேர்ந்த அமித் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!