G20 உச்சி மாநாட்டின் சிறப்பு மெனு.. இந்தியாவின் சமையல் பாரம்பரியத்தை பிதிபலிக்கும் தினை உணவுகள்..

By Ramya s  |  First Published Sep 9, 2023, 2:03 PM IST

உலக தலைவர்களுக்கு இந்தியா தனது சமையல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் G20 மெனுவில் தினை ஹீரோவாக உள்ளது.


2023-ம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கிய ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்  உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளுடன் இந்த ஜி 20 மாநாடு நடைப்ற்று வருகிறது. இந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் உலக தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தினைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்திய உணவு வகைகள் ஜி 20 விருந்தில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

G20 தலைவர்களுக்கு தினை அடிப்படையிலான உணவுகள் உட்பட இந்திய உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கை இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக G20 இந்தியாவின் சிறப்பு செயலாளர் முக்தேஷ் பர்தேஷி கூறினார். 2023 தினைகளின் ஆண்டு என்பதால் தினை சார்ந்த உணவுகள் ஜி 20 விருந்தில் வழங்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

Latest Videos

undefined

ஜி20 அமைப்பில் இணைந்த ஆப்பிரிக்கா யூனியன்.. பிரதமர் மோடி கோரிக்கையை ஏற்ற உறுப்பு நாடுகள் - ஏன்? எதற்கு?

இந்தியாவின் சமையல் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் இனிப்பு வகைகளும் உலக தலைவர்களுக்கு பரிமாறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் அனைத்து ஹோட்டல்களிலும் புதுமையான தினை உணவுகள் வழங்கப்படும் என்றும் முத்தேஷ் பர்தேஷி கூறினார்.

பழங்குடியின பெண்களான ரைமதி கியூரியா மற்றும் சுபாஷா மஹந்தா ஆகியோரின் முயற்சியால், உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒடிசாவிலிருந்து சுவையான தினை உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒடிசாவின் கோராபுட் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய பழங்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இரு பெண்களும் பாரத் மண்டபத்தில் தினை விவசாயம் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

தினை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் அரை பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பாரம்பரிய உணவாகக் கருதப்படுகிறது மற்றும் தற்போது இந்தியா உட்பட 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு G20 நிகழ்வுகளில், பிரதிநிதிகளுக்கு முறையே மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு தினை உணவுகள் வழங்கப்பட்டன. ஜூன் மாதம் கோவாவில் நடந்த ஜி20 சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கூட்டமாக இருந்தாலும் சரி அல்லது ஆகஸ்டில் வாரணாசியில் நடந்த ஜி20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டமாக இருந்தாலும் சரி, தினைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவு வகைகளை தலைவர்கள் ருசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!