ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் சிறப்பு ஜி20 விருந்து.. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

By Ramya s  |  First Published Sep 9, 2023, 12:20 PM IST

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடுக்கும் சிறப்பு விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்


உலகில் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த இந்தியா தலைமையில் ஜி 20 மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முதல் அமர்வு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக பிரண்டமாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஒரே பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் மாநாட்டி பிரதமர் மோடி வரவேற்புரை ஆற்றினார். அப்போது பேசிய பிரதமர், உலகளவில் போரினால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையை போக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

Latest Videos

undefined

கொரோனாவை நம்மால் வெல்ல முடியும் என்றால் இதையும் நாம் வெல்ல முடியும் : ஜி20 மாநாட்டில் பிரதமர் பேச்சு

ஐரோப்பிய யூனியம் மற்றும் பல சர்வதேச அமைப்புகளும் தலைவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். பல உலக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் டெல்லி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று இரவு சிறப்பு விருந்தளிக்கிறார். வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் தலைவர்கள் தவிர, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், மத்திய அரசின் செயலாளர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாரத் மண்டபத்தில் மல்டிஃபங்க்ஷன் ஹாலில் இன்றிரவு இந்த சிறப்பு விருந்து நடைபெற உள்ளது.

இந்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் நாளை மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதனிடையே முன்னாள் பிரதமர்களான டாக்டர் மன்மோகன் சிங், எச்.டி.தேவே கவுடா ஆகியோருக்கும் சிறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உடல்நலக் காரணங்களால் ஜனாதிபதி முர்மு வழங்கும் ஜி 20 விருந்தில் பங்கேற்க முடியாது என்று தேவகவுடா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். எனினும் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கார்கேவை அழைக்காததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அரசை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!