உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா அளிக்கும் விருந்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதாக நினைக்கும் வகையில் தடபுடலாக, விரிவான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு பாரத் மண்டபத்தில் இந்தியா தலைமையில் நடைபெற்று வருகிறது. இதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் G20 உச்சி மாநாட்டில் கூடியிருக்கும் G20 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு சனிக்கிழமையன்று சிறப்பு விருந்து வழங்கப்படுகிறது. இந்த விருந்து முழுக்க முழுக்க சைவ உணவு வகைகளை மட்டும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது எனத் தெரிகிறது.
undefined
இதற்கான மெனுவில் இந்திய சுவைகளுடன் கூடிய உணவுகள் மற்றும் சிறுதானியங்களில் இருந்து செய்யப்பட்ட புதுமையான உணவுகள் பரிமாறப்பட்ட உள்ளன. இந்தியாவுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்கள் யாரும் இந்த விருந்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதாக நினைக்கும் வகையில் தடபுடலாக, விரிவான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் சிறப்பு ஜி20 விருந்து.. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
விருந்து மெனுவில் இடம்பெறும் உணவுகளின் விவரம் பின்வருமாறு:
உள்ளூர் உணவு வகைகள்: தாஹி பல்லா, சமோசா, பேல்பூரி, வடபாவ், காரமான சாட், வாட்டர் பான்கேக், தஹி பூரி, சேவ், பூரி, பிகானேரி தால் பராத்தா, பலாஷ், லீல்வா கச்சோரி, டிக்கி, ஜோத்புரி காபூலி புலாவ் ஆகிய இந்திய உள்ளூர் உணவுப் பதார்த்தங்கள் விருந்தினர்களுகுகப் பரிமாறப்பட உள்ளன.
சிறுதானிய உணவு வகைகள்: சிறுதானிய வகைகளைக் கொண்டு தயார் செய்யப்பட சமோசா, பராத்தா, கீர், புட்டு ஆகியவையும் ஜி20 தலைவர்களுக்கான விருந்தில் இடம்பெற இருக்கின்றன.
இந்திய மாநிலங்களின் உணவு வகைகள்: பீகாரின் லிட்டி சோக்கா, தினையால் செய்யப்பட்ட ராஜஸ்தானி டல் பாடி சுர்மா, பெங்காலி ரசகுல்லா, பஞ்சாபின் தால் தட்கா, தென் மாநிலங்களில் இருந்து ஊத்தபம், மசாலா தோசை, இட்லி சாம்பார், வெங்காய மிளகாய் ஊத்தாபம், மைசூர் தோசை என நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரசித்தமாக விளங்கும் உணவு வகைகள் பரிமாறப்படும்.
சாலடுகள்: இந்திய கிரீன் சாலட், பாஸ்தா மற்றும் வறுக்கப்பட்ட காய்கறி சாலட், கொண்டைக்கடலை சுண்டல் போன்றவையும் விருந்தில் இடம்பிடிக்க உள்ளன.
மெயின் கோர்ஸ்: பனீர் லபப்தார் (உத்தரப்பிரதேச உணவு), உருளைக்கிழங்கு லியோனைஸ், சப்ஜா கோர்மா (ஆந்திரப் பிரதேச உணவு), முந்திரி மக்கானா, பென்னே அராபியட்டா சாஸில், பருப்பு, ஜோவர் தால் தட்கா (உத்தரப்பிரதேச உணவு), சாதம், வெங்காய சீரக புலாவ் (பஞ்சாபி உணவு), ரொட்டி, தந்தூரி ரொட்டி, பட்டர் நான், குல்ச்சா ஆகியவை மெனுவின் மெயின் கோர்ஸில் இடம்பெறும்.
ரைத்தா மற்றும் சட்னி வகைகளில் வெள்ளரிக்காய் ரைத்தா, புளி மற்றும் பேரீச்சம்பழ சட்னி, ஊறுகாய், தயிர் ஆகியவை கொடுக்கப்படும்.
இனிப்பு வகைகள்: ஜலேபிர குட்டு மால்புவா (உத்தர பிரதேசம் ஸ்பெஷல்), கேசர் பிஸ்தா ரசமலாய் (ஒடிசா ஸ்பெஷல்), சூடான வால்நட், இஞ்சி புட்டிங், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், பிளாக் கரண்ட் ஐஸ்கிரீம், குலாப் சுர்மா, பிஸ்தா குல்பி, கம் புட்டிங், ஸ்ரீகண்ட் புட்டிங், குல்ஃபி வித் ஃபலூடா, கேசர் பிஸ்தா தந்தாய், வெர்மிசெல்லி, பாதாம் புட்டு, மிஸ்ரி மாவா, கேரட் அல்வா, மோட்டிச்சூர் லட்டு, உலர் பழ இனிப்புகள், அத்தி புட்டிங், அங்கூரி ரசமலாய், ஆப்பிள் க்ரம்பிள் பை, ஜோத்பூரி மாவா ஆகிய இனிப்பு பலகாரங்கள் விருந்தில் இடம்பெற உள்ளன.
கொரோனாவை நம்மால் வெல்ல முடியும் என்றால் இதையும் வெல்ல முடியும் : ஜி20 மாநாட்டில் பிரதமர் பேச்சு