ஏசியாநெட் நியூஸ் தனது மகத்தான நெட்வொர்க் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான ஆறாவது எபிசோட்.
கோப்பையிலும் பாலிடிக்ஸ்...
எப்ஐஹெச் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை டிராபியில் உள்ள உலக வரைபடத்தில் ஜம்மு & காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காட்டப்பட்டு இருந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
எப்ஐஹெச் தலைவராக 2016 ஆம் ஆண்டில் நரிந்தர் பத்ரா பதவியேற்றார். இதன்பிறகு, 2018 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையின்போது எந்த ஒரு இந்திய அரசியல் தலைவரையும் இந்தியாவில் இந்த கோப்பையை வழங்க அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும், தவறான வரைபடம் கொண்ட கோப்பையை இந்தியாவுக்குள் நுழைவதற்கு இந்திய சுங்கவரித்துறை அனுமதிக்காமல் இருப்பதற்கும் உறுதி அளிப்பதாக தெரிவித்து இருந்தார்.
1975 ஆம் ஆண்டு, இந்தியா வென்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் காட்டப்பட்டு இருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிகமாக எப்ஐஹெச் நிர்வாகக் குழுவில் இடம் பெற்று இருந்தனர். இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு, இந்தியா சார்பில் எப்ஐஹெச் தலைவராவதற்கு பத்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இறுதியில், 2017 ஆம் ஆண்டு கோப்பையில் இருந்த வரைபடம் சரி செய்யப்பட்டது. கண்டங்கள் மட்டுமே காட்டப்பட்டன மற்றும் நாட்டின் கோடுகள் அகற்றப்பட்டன.
தேவ கவுடா குடும்பத்தில் போட்டா போட்டி...
தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஆழமாக கால் பதிக்க முடிவு செய்து விட்டனர். எதிர்நோக்கி இருக்கும் தேர்தலில் களம் இறங்குவதற்கு தயாராகி வருகின்றனர். குடும்பமே குதூலகத்தில் இருக்கிறதாம். சமீபத்தில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் சந்தித்துப் பேசி இருந்தார்.
தேவ கவுடா குடும்பத்தைச் சேர்ந்த பலர் எதிர்நோக்கி இருக்கும் 2023 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று மைசூரில் இருந்து தகவல்கள் கசிகின்றன. இதற்கான போட்டியும் குடும்பத்திற்குள் பலமாக நடக்கிறதாம். அதிலும் முக்கிய தொகுதியில் யார் போட்டியிடுவது என்று தேவ கவுடா மருமகள்களுக்குள் பெரிய போட்டியே நடக்கிறதாம். இதுதான் தற்போதைய டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறதாம்.
தற்போது, தேவகவுடா ராஜ்யசபா உறுப்பினராகவும், அவரது பேரன் பிரஜ்வல் மக்களவை உறுப்பினராகவும் உள்ளனர். கவுடாவின் மகன்கள் ஹெச்டி குமாரசாமி, ஹெச்டி ரேவண்ணா, மருமகள் அனிதா குமாரசாமி ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர். மேலும் இரண்டு குடும்ப உறுப்பினர்களான டி.சி.தம்மன்னா மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரும் எம்.எல்.ஏ.க்கள்.
மற்றொரு பேரன் சூரஜ் ரேவண்ணா சட்டமன்ற உறுப்பினராகவும், மருமகள் பவானி ரேவண்ணா ஹாசன் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளனர்.
பதவியில் உள்ள பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை கட்சி ஏற்கனவே இந்த தேர்தலுக்கும் அறிவித்துள்ளதாம். அடுத்த சுற்றிலும் குடும்ப உறுப்பினர்களுக்கான வாய்ப்பு காத்திருக்கிறதாம். ஆனால் பட்டியல் நீளுமோ என்று கட்சியின் மூத்தவர்கள் கவலையில் உள்ளனராம்.
தற்போது ஹைலைட்டாக அனைவரும் கவனிப்பது பவானி ரேவண்ணா, அனிதா குமாரசாமி இடையிலான போட்டியைத் தான். நாக்-அவுட் சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்கலாம் என்று காத்துக் கிடக்கின்றனர்.
From the India Gate: அமித் ஷாவை பார்த்தால் தெரியாது...ஆனால் அமைதியாக பஞ்சாயத்து செய்துவிடுவாராம்!!
கர்நாடகாவில் பாஜகவின் ஜாதி அரசியல்...
கர்நாடகா தேர்தலில் ஒக்கலிக்கா சமுதாய மக்களுக்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது. அதிகளவில் இருக்கும் இந்த சமுதாய மக்களின் வாக்குகளை கவருவதற்காக அரசியல் கட்சிகள் போட்டி போடுவது சகஜம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை கர்நாடகா மாநில பாஜக தலைவராக்க வேண்டும் என்று பாஜக தற்போது துடித்து வருகிறது. எல்லாம் தேர்தல் ஜூரம்தான்.
சமீபத்தில் ஊடகங்களிடம் நடைபெற்ற உரையாடலில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த சமுதாய மக்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்து அவர்களுடனான தொடர்பு எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். லிங்காயத் சமுதாய மக்களை கட்சியின் மூத்த தலைவரான பிஎஸ் எடியூரப்பா ஒருங்கிணைப்பார் என்று கட்சி நம்புகிறது. ஆனால், ஒக்கலிக்கா சமுதாய மக்களின் வாக்கு வங்கியைப் பெறுவதற்கு அந்த சமுதாயத்தில் இருந்து ஒருவர் தேவை என்பதை பாஜக உணர்ந்து இருக்கிறது.
தற்போதைய தலைவர் நளீன் குமார் கட்டீலின் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், வேறு ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர். சி.என். அஸ்வத் நாராயண் மற்றும் தேசிய பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோருக்கு இடையே கட்சியை தலைமையேற்று நடத்தும் போட்டி இருக்கலாம் என்று பாஜக உள்கட்சி வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.
From the India Gate : அழகான முதல்வர் வேட்பாளர் முதல் ஆயுர்வேத ரிசார்ட் சர்ச்சை வரை - அரசியல் சலசலப்பு !!
கெலாட்டின் பதவி ஆசை...
அரசியல்வாதிகள் பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி வரிகளுக்கு இடையே அதிக சர்ச்சைகளை விட்டுச் செல்வதில் பெயர் பெற்றவர்கள். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
சமீபத்திய நேர்காணலில் ஒன்றில், வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு காங்கிரஸ் தேர்வு செய்யப்பட்டால், முதல்வர் நாற்காலியில் தொடரவே தான் விரும்புவதாக மறைமுகமாக கெலாட் கூறி இருந்தார். இளைஞர்கள் இருக்கும்போது, அவர்களுக்கு வழி விட்டு ஓய்வு எடுக்கலாம் என்ற எண்ணமே அவருக்கு இல்லை என்று காங்கிரஸ் கட்சிக்குள் சல சலப்பு துவங்கியுள்ளது. ஆனால், அவற்றை எல்லாம் பொருட்படுத்தவில்லை.
`எங்கள் கட்சி வலுவடைந்து வருகிறது. எங்களது அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். நான் எந்தப் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் முதல்வர் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்,'' என்று கெலாட் மற்றவர்களின் யூகத்திற்கே விட்டுவிட்டார்.
காங்கிரஸின் 'இளம் தலைவர்' ஒருவர் தனது கனவை நனவாக்க காத்திருக்கனும் போல. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி இருந்த ராகுல் காந்தியும் பாராமுகமாக இருக்கும் அந்த இரண்டு தலைவர்களையும் ஒட்டு போட முயற்சித்தார். ஆனாலும், ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். கெலாட்டின் பதவி வெறியே இதற்குக் காரணம் என்று கிசு கிசுக்கின்றனர். கெலாட்டின் இந்தப் பேட்டியைப் பார்த்து ராஜஸ்தான் காங்கிரஸ் கப் சிப் என்று இருக்கிறதாம். ஆனால், காங்கிரஸ் தலைமை வேறு முடிவை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ம்ம்ம்ம்... காத்திருப்போம்.