ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான ஐந்தாவது எபிசோட்.
இந்திய கேட்டில் இருந்து... அதிகாரத்தின் திரைமறைவுகளில் நிறைய விஷயங்கள் நடக்கும். கருத்துகள், சதிகள், அதிகார சித்து விளையாட்டுக்கள், அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதில் சண்டைகள் என்று ஏராளமாக தினமும் நடந்து வருகிறது.
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. . இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான இந்த வார எபிசோட்.
அழகான முகம்
ராஜஸ்தானைச் சேர்ந்த தேசிய அளவிலான பாஜக தலைவர் ஒருவரின் கணிப்பு இப்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்வராகும் முகம் அழகாக இருக்கும் என்று முக்கிய தலைவர் ஒருவர் கூறினார்.
அப்போதிருந்து, ஒரு பெயருடன் முகத்தை பொருத்துவது தான் யூகமாக இருந்தது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்குப் பதிலாக `புதிய முகம்' வருமா என்பதுதான் சத்தமாக பேசப்படுகிறது. அல்லது இந்த புதிய முகம் ராஜஸ்தான் அரச குடும்பத்தின் மற்றொரு உறுப்பினராக இருக்குமா ? என்பதே கேள்வியாக இருக்கிறது.
தேசிய கட்சிகள் மோதல்
இதற்கிடையே எதிர்முகாமிலும் முக்கிய பிரச்சனை தலை தூக்கியுள்ளது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவரின் புகைப்படம் தவறான காரணங்களுக்காக வெளிவந்தது. உதய்பூரில் கசிந்த அரசு ஆசிரியர் பணிக்கான வினாத்தாள் கசிந்ததற்கு மூளையாக செயல்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
60க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த இருவரும் தலைமறைவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நல்ல தொடர்பு உள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர்களின் பல புகைப்படங்கள் வெளிவருவதால், பாஜக அதனை கையில் எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் 15க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில் இது இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை உருவாக்கியுள்ளது.
சிறை துயரங்கள்
உ.பி.யின் சோட் நேதாஜியின் பயணத் திட்டத்தில் அடிக்கடி மாநிலத்தில் உள்ள பல சிறைகளுக்குச் செல்வது அடங்கும். ஏனெனில் அகிலேஷ் யாதவின் கட்சி சகாக்களில் பலர் தங்கள் கடந்தகால செயல்களுக்காக சிறையில் உள்ளனர்.
சோட் நேதாஜி சிறையில் உள்ள ஒருவரைச் சந்தித்த உடனேயே, கைதி குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அகிலேஷ் தனது எம்எல்ஏ ஒருவரை கான்பூர் சிறையில் சந்தித்தார். ஆனால் அடுத்த நாளே அந்த எம்எல்ஏ வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். பெரும் கூச்சலும் எழுந்தன.
சண்டை வரும் ஆனா... வராது
கண்ணூரைச் சேர்ந்த ஜெயராஜன்கள் தங்களுக்கு இடையிலான சர்ச்சைகளில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக, இ.பி. ஜெயராஜனுக்கும், பி இனிஷியலை கொண்டவருக்கும் இடையே ஒரு அனல் பறக்கும் போட்டியை பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், சர்ச்சைக்குரிய ஆயுர்வேத ரிசார்ட் திட்டத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இ.பி.ஜெயராஜன் ஒப்புக்கொண்டதை தோழர்கள் ஏற்றுக்கொண்டதால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இருப்பினும், அவர் தனது மனைவியும் மகனும் பங்குதாரர்களாக இருப்பதை ஏற்றுக்கொண்டார். அவர் சொல்வதை கவனமாகக் கேட்ட கட்சி, சுற்றுச் சூழல் விதிகளைக்கூட மீறியதாகக் கூறப்படும் திட்டத்தில் அவரது மனைவி மற்றும் மகன் செய்த பல கோடி மதிப்புள்ள முதலீட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் உண்மையில் இல்லை என்று ஒப்புக்கொண்டார்.
இ.பி. ஜெயராஜன் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை என்று பி இனிஷியலை கொண்டவர் கூறி வருகிறாராம். ஆனால் மாநில குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்படுவது குறித்துதான் அனைவரின் பார்வையும் உள்ளதாம். ஆனால் சிவப்புக் கோட்டைக்குள் என்ன நடக்கிறது போன்ற விவரங்கள் வெளியே தெரியாமல் கூட இருக்கலாம் என்று கிசு கிசுக்கப்படுகிறது.
From the India Gate: அமித் ஷாவை பார்த்தால் தெரியாது...ஆனால் அமைதியாக பஞ்சாயத்து செய்துவிடுவாராம்!!