
ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது கரண்ட் அக்கவுன்ட் எனப்படும் நடப்பு கணக்குக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு பணம் மதிப்பிழப்பு பிரதமர் மோடியால் நவம்பர் 8ஆம் தேதி அதிரடியாக அறிவிக்கப்பட்டது
அன்று முதல் ரூ.1000,500 செல்லாது என்றும் அதற்கு பதில் ரூ. 2000 நோட்டுகளும் அதன் பின்னர் ரூ. 500 ரூபாய்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
திடீரென ஒரே இரவில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பு வெளியானதால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பண மதிப்பிழப்பு அறிவிப்பை தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
ஒருவரது வங்கி கணக்கில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால் வரி விதிக்கபடும்,வருமானவரி நோட்டீஸ் வரும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வராத நிலையில் நாடெங்கும் தொழில்கள் முடங்கின.
இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் தொழிலதிபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பின்னர் வங்கிகளில் வாரத்துக்கு 24,000 ரூ வரை எடுக்கலாம் என்று அறிவிக்கபட்டது. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்.
ஏடிஎம்களில் 2000 என்பது 4500 ரூபாயாக மாற்றப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் 10,000 ரூபாய் வரை என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை போன்ற நகரங்களில் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுக்கள் தாரளமாக புழக்கத்துக்கு வந்தது.
இந்நிலையில் வணிகர்கள் தொழிலதிபர்கள் தினசரி பணம் கையாளுவதில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு காரணமாக நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ரிசர்வ் வங்கி இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில் கடந்த மூன்று மாதமாக மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், பண பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
அதாவது, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு யாருக்கு பொருந்தும் ?
நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ,ஏடிஎம் லிருது பணம் எடுப்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என தற்போது , ரிசர்வ் வங்கி அதிரடியாக தெரிவித்துள்ளது.
பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை வங்கிகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளதால், வங்கிக்கு வங்கி பணம் எடுக்கும் உச்ச அளவு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுமை பொறுமை..... ரொம்ப சந்தோஷப் படாதீங்க ....இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கரண்ட் அக்கவுன்ட்கு மட்டும் தானே தவிர, சேமிப்பு கணக்கு எனப்படும் , சேவிங்ஸ் அக்கவுன்டுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.