அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப்பயணம்... முதல்வர் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு..!

Published : Aug 15, 2019, 12:38 PM IST
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப்பயணம்... முதல்வர் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு..!

சுருக்கம்

டெல்லியில் அரசு பேருந்துகளில் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  

டெல்லியில் அரசு பேருந்துகளில் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

\

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  கெஜ்ரிவால் கூறும் போது,  ரக்‌ஷா பந்தன் தினமான இன்று, நமது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை அளிக்கிறேன்.

டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மாதாந்திர கட்டண செலுத்து முறையில் இயங்கும் கிளஸ்டர் பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம்” என அறிவித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"