வல்லபாய் பட்டேலின் கனவு நனவானது... பிரதமர் மோடி பெருமிதம்..!

By vinoth kumarFirst Published Aug 15, 2019, 10:30 AM IST
Highlights

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. மேலும், நாடு முழுக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. மேலும், நாடு முழுக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இந்திய நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி. அதில் அவர் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

click me!