covid vaccine: 15ம் தேதி முதல் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி : 18 முதல் 59 வயதினர் இலவசமாகச் செலுத்தலாம்

By Pothy Raj  |  First Published Jul 13, 2022, 4:38 PM IST

18 வயது முதல் 59வயதுள்ளவர்கள் அனைவரும் வரும் 15ம் தேதி இலவசமாக கோவி்ட் பூஸ்டர் தடூப்பூசி அரசின் தடுப்பூசி மையங்களில் செலுத்தலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


18 வயது முதல் 59வயதுள்ளவர்கள் அனைவரும் வரும் 15ம் தேதி இலவசமாக கோவி்ட் பூஸ்டர் தடூப்பூசி அரசின் தடுப்பூசி மையங்களில் செலுத்தலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 15ம்தேதி தொடங்கும் இந்த பூஸ்டர் தடுப்பூசி முகாம், 75 நாட்கள் நடக்கிறது. 75-வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசி முகாம் 75 நாட்கள் நடத்தப்படஉள்ளது.

Tap to resize

Latest Videos

நாட்டில் உள்ள 18 முதல் 59 வயதுள்ள 77 கோடி மக்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.60வயதுக்கு மேற்பட்டவர்களில் 26 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுதவிர மருத்துவ, சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கு விலை 52 வாரங்களில் இல்லாத அளவு சரிவு

மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இந்தியர்களில் பெரும்பாலானோர் 9 மாதங்களுக்கு முன்பே 2வது தடுப்பூசி செலுத்திவிட்டனர். இரு தடுப்பூசி செலுத்தி  6 மாதங்களுக்குப்பின் உடலி்ல நோய் எதிர்ப்புச்சக்தி திறன் குறைந்துவிடும் என்று ஐசிஎம்ஆர், மற்றும் பல்வேறு சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பூஸ்டர்தடுப்பூசி முக்கியம்.

அதற்காகத்தான் மத்திய அரசு 75 நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாமை வரும் 15ம்தேதி முதல் நடத்த உள்ளது. இதில் 18 வயது முதல் 59 வயதுள்ளவர்கள் அனைவரும் அரசின் தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்

ஓய்வூதியதாரர்கள் அலர்ட்! ஓய்வூதியம் வழங்குவதில் புதிய மாற்றத்தை கொண்டு வருகிறது இபிஎப்ஓ(EPFO)

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த வாரம், வெளியிட்டஅறிவிப்பில், “ 2வது தடுப்பூசிக்கும், முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கும் இடையிலான இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாகக் குறைத்தது. தேசிய தடுப்பூசி தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின்அடிப்படையில் இந்தக் கால இடைவெளியே மத்திய அரசு குறைத்து அறிவித்தது.

தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தும் பொருட்டும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த, கடந்த ஜூன் 1ம் தேதி முதல் வீடுதோறும் தடுப்பூசி முகாமை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கு: 26ம்தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் உள்ள மக்களில் 96 சதவீதம்பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டனர், 87 சதவீதம் பேர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திவிட்டனர். ஏப்ரல் 10ம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது.

click me!