வீட்டில் தனியாக இருந்த உரிமையாளரையே கொன்ற நாய் - அதிர்ச்சி சம்பவம்!

Published : Jul 13, 2022, 04:33 PM IST
வீட்டில் தனியாக இருந்த உரிமையாளரையே கொன்ற நாய் - அதிர்ச்சி சம்பவம்!

சுருக்கம்

லக்னோவில் 82 வயது மூதாட்டி தனது செல்லப் பிராணி பிட்புல் என்ற நாயால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை லக்னோவில் உள்ள கைசர்பாக் பகுதியில் 82 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் அவரது மகனின் செல்லப்பிராணி நாயால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுசீலா திரிபாதி என்பவர் தான் இறந்தவர் ஆவார். உடற்பயிற்சி பயிற்சியாளரான அவரது மகன் அமித், இரண்டு செல்ல நாய்களை வைத்திருந்தார். 

ஒன்று பிட்புல் வகையையும், மற்றொன்று லாப்ரடோர் வகையை சேர்ந்தவை ஆகும்.  பெண் வீட்டில் தனியாக இருந்த போது, காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை மகன் கண்டுள்ளார். அதிக ரத்தம் வெளியேறியதால் அருகே உள்ள பல்ராம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சுசீலாவின் உடலில் கழுத்து முதல் வயிறு வரை மொத்தம் 12 கடுமையான காயங்கள் காணப்பட்டன. இதுபற்றி கூறிய அக்கம்பக்கத்தினர், ‘காலை 6 மணியளவில், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தோம். அப்போது நாய் சுசீலாவை தாக்கியது. அவர் அலறிய சத்தம் வெளியே கேட்டது. நாங்கள் உடனே அவருடைய வீட்டிற்கு சென்றோம். 

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

ஆனால் அது உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. அவரின் மகன் வீட்டிற்கு வந்தபோது, ​​​​அவர் திறந்தார்.அப்போது அவர் பலத்த காயமடைந்தார். லக்னோ முனிசிபல் கார்ப்பரேஷன் (LMC) ஸ்வான் லைசென்ஸ் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை பை-லா 2003 என்ற பெயரில் நாய்களை வளர்ப்பதற்கான கையேட்டை வெளியிட்டது. கையேட்டின் படி, நாய்களை வளர்க்க விரும்புபவர்கள் பல நிபந்தனைகளை கடைபிடித்த பிறகு கட்டாயமாக உரிமம் பெற வேண்டும்.

எந்தவொரு நபரும் தனது நாயை அண்டை வீட்டாருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லாத வகையில் வைத்திருக்க வேண்டும். லக்னோ நகரில் மொத்தம் 4,824 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 2,370 பெரிய இன நாய்களுக்கானவை’ என்று கூறப்பட்டுள்ளது. தன் வீட்டு செல்லப்பிராணியால் ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..கைலாசா ஆண்டவர் மீண்டும் வருகிறார்.. நித்யானந்தா ரிட்டர்ன்ஸ்.! பக்தர்களே ரெடியா.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!