பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே 200 யூனிட் இலவசம் மின்சாரம் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும்.
இதையும் படிங்க: ஆபரேஷன் காவேரி மீட்பு பணியில் உள்ள ஒரே பெண்… யார் இந்த ராஜ் கவுர் போபராய்?
குடும்பத் தலைவிகளுக்கு 2000 ரூபாய் ஊக்கத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 1,500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை உதவித்தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்பொழுது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விரிவாக்கம்! 470 புதிய விமானங்களை இயக்க 1000 விமானிகளுக்குப் பணி வாய்ப்பு
உடுப்பியில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, மீனவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் உயிர் காப்பீடு வழங்கப்படும், பெண் மீனவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும், ஒவ்வொரு மீனவருக்கும் தினம்தோறும் 500 லிட்டர் டீசல் 25 ரூபாய் மானியத்துடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.