கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய பாதிரியார் பிஷப் பிராங்கோ முலக்கல் ராஜினாமா

Published : Jun 01, 2023, 05:56 PM ISTUpdated : Jun 01, 2023, 06:30 PM IST
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய பாதிரியார் பிஷப் பிராங்கோ முலக்கல் ராஜினாமா

சுருக்கம்

2018ஆம் ஆண்டு கேரளாவில் கன்னியாஸ்திரி பலாத்காரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜலந்தர் பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

திருவனந்தபுரம்: கடந்த 2018ம் ஆண்டு கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிராங்கோ முலக்கல், ஜலந்தர் பிஷப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வியாழன் அன்று தனது ராஜினாமாவை போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டதாக அவர் உறுதிப்படுத்தினார். அவர் இப்போது பிராங்கோ பிஷப் எமரிட்டஸ் என்று அழைக்கப்படுவார். 

கோட்டயத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் 2022 இல் முலக்கலை பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது. முலக்கலின் ஊழியத்தில் நியமனக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என இந்தியாவில் வாட்டிகன் பிரதிநிதித்துவ அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த வழக்கில் பிஷப் பிராங்கோவை விடுவித்ததற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் புதிதாகக் கிளம்பிய மாமியார் மருமகள் சண்டை! அரசு கொடுக்கும் ரூ.2000 உரிமைத்தொகை யாருக்கு?

முலக்கலின் ராஜினாமா ஒழுங்கு நடவடிக்கையாகக் கோரப்படவில்லை என்றும் குறிப்பாக புதிய பிஷப் தேவைப்படும் மறைமாவட்டத்தின் நன்மைக்காகவே ராஜினாமா கோரப்பட்டது என்றும் வாட்டிகன் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக பிப்ரவரியில், பிஷப் பிராங்கோ வாட்டிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தான் பதவியில் இருந்து விலகுவது குறித்து போப் ஆண்டவரிடம் தெரிவித்ததாக பிராங்கோ முலக்கல் தெரிவித்திருந்தார்.

ராஜினாமா செய்வதாக அறிவித்த பிராங்கோ, தனது வாழ்க்கையின் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டபோது தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். "ஜலந்தர் மறைமாவட்டத்திற்காகவும், புதிய பிஷப் நியமனத்திற்காகவும் நான் பதவியை ராஜினாமா செய்தேன்," என்று அவர் கூறினார்.

புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வருவாய்... மே மாத வசூல் 1.57 லட்சம் கோடி! தமிழ்நாடுக்கு 4வது இடம்!

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!