இஸ்ரோவின் ககன்யான் திட்டம்: விண்வெளிக்கும் செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் யார்?

By Manikanda Prabu  |  First Published Feb 28, 2024, 2:42 PM IST

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கும் செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்


ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ இறங்கி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தை அறிவித்து, மனிதர்களை அனுப்புவதற்கான வியூகங்களை இஸ்ரோ வகுத்து வருகிறது. இந்த நிலையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம்விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வின்வெளி ஆராய்சி தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம்விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களையும் அவர் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

Tap to resize

Latest Videos

அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேர் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனர். தரையில் இருந்து 400 கிமீ தூரம் கொண்ட விண்வெளி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்படும் இவர்கள், அங்கு 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு மீண்டும் பத்திரமாக திரும்பி வரவுள்ளனர்.

குரூப் கேப்டன் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர்


1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி கேரளாவின் திருவாழியாட்டில் பிறந்த பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர், நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவர். விமானப்படை அகாடமியின் மரியாதை வாள் பெற்றுள்ளார். 1998ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இந்திய விமானப்படையின் (IAF) போர் விமானப்பிரிவில் நியமிக்கப்பட்ட  அவர், முதல் ரக பயிற்றுவிப்பாளர் ஆவார். தாம்பரம் பறக்கும் பயிற்றுனர்கள் பள்ளி மற்றும் வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், சுமார் 3,000 மணிநேரம் விமானத்தை ஓட்டிய பறக்கும் அனுபவம் கொண்டவர். Su-30 MKI, MiG-21, MiG-29, Hawk, Dornier, An-32, போன்ற பல்வேறு விமானங்களை பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஓட்டியுள்ளார். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டாஃப் கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், Su-30 படையின் கமாண்டர் ஆவார்.

குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்


விண்வெளி செல்லும் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம்தேதி சென்னையில் பிறந்தவர். அவர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) இருந்து தேர்ச்சிபெற்றவர் ஆவார். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் அஜித் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். சுகோய், மிக், ஜாகுவார், டோர்னியர், ஏஎன்-32 என பல்வேறு வகையான விமானங்களை அவர் இயக்கியுள்ளார்.

மக்கள்தொகையில் 10,000 மரபணுக்கள் வரிசை ரெடி... பயன்கள் என்னென்ன? மத்திய அமைச்சர் விளக்கம்

குரூப் கேப்டன் அங்கத் பிரதாப்


உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 1982 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி பிறந்த அங்கத் பிரதாப், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். போர் வீரர்களின் தலைவரான அவர், சுமார் 2,000 மணிநேரம் விமானத்தை ஓட்டிய பறக்கும் அனுபவம் கொண்டவர். Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier, An-32 போன்ற பல்வேறு விமானங்களை அவர் ஓட்டியுள்ளார்.

விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா


1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்த சுபான்ஷு சுக்லா, தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். 2006 ஜூன் மாதம் 17ஆம் தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். அவர் ஒரு போர் போர் தலைவர். சுமார் 2,000 மணிநேர பறக்கும் அனுபவம் கொண்ட விமானியான சுபான்ஷு சுக்லா, Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier, An-32 போன்ற பல்வேறு விமானங்களை ஓட்டியுள்ளார்.

click me!