Breaking : மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு.. முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது!

Ansgar R |  
Published : Mar 15, 2024, 06:25 PM ISTUpdated : Mar 15, 2024, 06:38 PM IST
Breaking : மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு.. முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது!

சுருக்கம்

Telangana Ex CM Daughter Kavitha Arrested : தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் மகள் கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று மார்ச் 15ம் தேதி தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் மகள் கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திய வந்தனர். இந்த சூழலில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி மதுக்கொள்கை வழக்கில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றம் ஒன்றில், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா ஐதராபாத்தில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளது. டெல்லியில் அவரிடம் மேற்கொண்டு நடக்கும் என்று தெரியவந்துள்ளது.

பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாகவும், தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசாங்கம் 100 நாட்களை நிறைவு செய்யும் நாளில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் மகள் கவிதா வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது. அதனை அடுத்து வெகு சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் தலைவர் கவிதா கடைசியாக கடந்த மார்ச் 2023ல் ED ஆல் விசாரிக்கப்பட்டார். ஆம் ஆத்மியின் தகவல் தொடர்புத் தலைவரான விஜய் நாயருடன் கவிதா தொடர்பில் இருந்ததாகவும், அவர் மதுபானத் தொழிலைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தும் போது தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கவிதாவின் முன்னாள் பட்டயக் கணக்காளரான புச்சிபாபு கோரண்ட்லா மற்றும் நாயர் மற்றும் பிறருடனான பல்வேறு சந்திப்புகளில் அவருக்காக வாதிட்ட அருண் ராம்சந்திர பிள்ளை ஆகியோரின் சாட்சியங்கள் அவரிடம் அளிக்கப்பட்டன. புச்சிபாபு பிப்ரவரியில் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டார், அதே சமயம் பிள்ளை முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்டுகளுக்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!